உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .

கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால், 58, என்பவர் தண்ணீர் டேங்க் லாரி மூலம் கந்தர்வகோட்டை பகுதிகளில் குடிநீர் விநியோகித்து தொழில் செய்து வந்தார்.வழக்கம்போல் டிராக்டர் வாகனத்தில் குடிநீர் ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை பட்டுக்கோட்டை - கந்தர்வகோட்டை சாலையில் மட்டங்கால் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனத்தை வழிமறித்து ராஜகோபாலை தூக்கிச் சென்று அருகில் இருந்த புதரில் வைத்து அடித்து கீழே தள்ளி தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தனர்.இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
பிப் 23, 2025 20:18

பணம், பெண், இல்ல நிலத்தகராறுதான் காரணமா இருக்கும் .யாரையும் பிடிக்க துப்பு கெட்ட போலுஸ். தத்தி உயர் அதிகாரிகள். எவனாவது பிடிபட்டால் சத்தம் போடாம என்கவுண்ட்டர் பண்ணுங்க...


Barakat Ali
பிப் 23, 2025 14:04

என்ன காரணம் ???? ஏன் இப்படி குற்றவாளிகள் பயமின்றித் திரிகிறார்கள் ????


Ramesh Sargam
பிப் 23, 2025 12:52

தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. GET OUT STALIN.