உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடி வெள்ளி... தேடி வந்த பக்தர்கள்...: அம்மன் கோவில்களில் பக்தி பரவசம்

ஆடி வெள்ளி... தேடி வந்த பக்தர்கள்...: அம்மன் கோவில்களில் பக்தி பரவசம்

கோவை: அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் தரும் ஜெயமாரியம்மன், புவனேஸ்வரி அம்மன் கோவில்களில் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு காமராஜர் நகர் சக்தி விநாயகர் - சித்தி விநாயகர் அருள் தரும் ஜெயமாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் வளையல் காப்பு அலங்காரத்துடன் வாராகி அம்மன் கோலத்தில் ஜெய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இதேபோல், ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. இதில் மூலவர் அம்மன் திருவாரூர் ஸ்ரீ கமலாம்பிகை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundarsvpr
ஜூலை 25, 2025 12:15

திருவிழா நாட்கள் மட்டும் திரள் திரளாக வருகிறோம். வீட்டிலுள்ள ஸ்வாமி விக்கிரகங்களுக்கு நாள்தோறும் பூஜை செய்யவேண்டும். இதனை செய்யாமல் திருவிழா நாட்கள் மட்டும் திருக்கோயில்களுக்கு வருவது சரியா என்பதனை யோசிக்கவேண்டும் நாள்தோறும் பல் விலக்கல் குளித்தல் போல் பூஜை செய்வது அவசியம்.


Rathna
ஜூலை 25, 2025 12:08

தமிழர்கள் தாய் வழிபாட்டை பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கின்றனர். பல கிராமங்களில், நகரங்களில் அவள் பல பெயர்களில் அருள்பலிக்கிறாள். அவளே ஆதி பராசக்தி. உண்மை அவளே.


Ramesh Sargam
ஜூலை 25, 2025 11:54

தாயே போற்றி. கருமாரியே போற்றி. சமயபுரம் மாரியமாவே போற்றி. வேம்புலி அம்மன் தாயே போற்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை