மேலும் செய்திகள்
சிறப்பு எழுத்தறிவு திட்டம்; கைதிகளுக்கு தொடக்கம்
03-Oct-2024
சிவகங்கை:புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் அடிப்படை கல்வி கற்ற 5.09 லட்சம் பேருக்கு நவ., 10ல் அ...ஆ... இ.... ஈ... எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 - --2023 முதல் செயல்படுகிறது. இத்திட்டம் மூலம் இது வரை 16 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். அந்த வகையில் இக்கல்வி ஆண்டில் (2024-- 2025) எழுதபடிக்க தெரியாதவர்கள் என 6.14 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.இதில் 5.09 லட்சம் பேர் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் அமைத்துள்ள 30,113 கற்போர் எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 30,113 தன்னார்வலர்களை கொண்டு கற்பித்தல், கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட பயிற்சி 2024 நவ., முதல் 2025 மார்ச் வரை நடைபெற உள்ளது. முதற்கட்ட பயிற்சி பெற்ற 5 லட்சத்து 9 ஆயிரத்து 459 பேரின், கற்றல் திறனை கண்டறிய நவ.,10 எழுத்து தேர்வு நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் ஏதேனும் 3:00 மணி நேரம் இத்தேர்வில் பங்கேற்கலாம். கற்பபோர் மையம் செயல்படும் பள்ளிகளிலேயே இத்தேர்வு நடத்தப்படும். தமிழில் அ....ஆ...இ...ஈ... ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி., கணக்கு தேர்வில் அடிப்படை கணிதம் உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
03-Oct-2024