மேலும் செய்திகள்
முகவர்களின் அலப்பரையால் ஆவினில் பால் தட்டுப்பாடு
21-Jul-2025
சென்னை: ஆவின் நிறுவனத்தின், 'எக்ஸ்' வலைதள பக்கம் நேற்று சீரடைந்தது. ஆவின் நிறுவனத்தின் அறிவிப்புகள், செய்திகள், ஆவின் டி.என்., என்ற, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் மாலை அப்பக்கத்தில், சினிமா குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதை பார்த்த பொதுமக்கள், ஆவின் எக்ஸ் பக்கத்தை, மர்ம நபர்கள், 'ஹேக்' செய்துள்ளனரா என்று கேள்வி எழுப்பினர். இது குறித்த செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது. இதைய டுத்து, ஆவின் அதிகாரிகள் விரைந்து, எக்ஸ் வலை தளத்தில் ஆவின் பக்கத்தை சீரமைத்துள்ளனர். சினிமா காட்சிகள் குறித்த பதிவு நீக்கப்பட்டு உள்ளது. இது எவ்வாறு பதிவானது என்றும் விசாரித்து வருகின்றனர்.
21-Jul-2025