உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவின் பால் விலை குறையவில்லை

ஆவின் பால் விலை குறையவில்லை

ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், பால் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. ஆனால், ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. இதை விசாரிக்க வேண்டும். மருந்துகள் இருப்பு இருந்தால் கூட, அவற்றின் விலை குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன், ஜி.எஸ்.டி., வரியை ஏன் குறைக்கவில்லை என, முதல்வர் கேள்வி எழுப்பி இருப்பதை கண்டிக்கிறேன். அவர்கள், மோடி வந்ததும் வரி போட்டது போல் பேசுகின்றனர். பலவித வரிகளை ஒருங்கிணைத்து தான் ஜி.எஸ்.டி., வரி கொண்டு வரப்பட்டது. தி.மு.க., - காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, 17 வரிகளை விதித்தது. - தமிழிசை மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ