உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை சம்பவத்திற்கு காரணம் துணைவேந்தர் இல்லாததே: ப.சிதம்பரம்

அண்ணா பல்கலை சம்பவத்திற்கு காரணம் துணைவேந்தர் இல்லாததே: ப.சிதம்பரம்

காரைக்குடி: “சென்னை அண்ணா பல்கலை சம்பவத்திற்கு துணைவேந்தர் இல்லாதது தான் காரணம்,” என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது. சென்னை அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டிக்கிறேன். அண்ணா பல்கலை உட்பட ஆறு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் இல்லை; இது வருத்தமளிக்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது இங்கிலாந்து கற்றுக் கொடுத்த பாடமா என தெரியவில்லை. தமிழகத்தில் மட்டு மின்றி எல்லா மாநிலத்திலும் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன. இதை தடுப்பது அரசின் பொறுப்பு. அரசின் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

குறையொன்றுமில்லை
டிச 31, 2024 14:17

துணைவேந்தர் இருந்தால் இந்த மாதிரி நடக்க வாய்ப்பில்லையா ? நம் நாட்டில் சைண்டிஸ்ட்களுக்கு மட்டும் குறைவே இல்லை.


gayathri
டிச 31, 2024 09:59

இதை எதிர் கட்சிகள் இருட்டடிப்பு செய்கின்றன.


சமீபத்திய செய்தி