உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தி.மு.க., பொதுச்செயலராகவும், அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமான ரூ.3.92 கோடி சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xxq1lp1w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்பிறகு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வேலுார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் துரைமுருகன் தவிர்த்து வந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் இன்று ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.துரைமுருகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்து சாட்சி விசாரணையை துவங்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Saran
ஏப் 24, 2025 21:56

His family members must be included in the case.


சிந்தனை
ஏப் 23, 2025 21:30

இப்படியே மாத்தி மாத்தி பேசிக்கிட்டே இருங்க அப்பதான் உங்களுக்கு வாழ்க்கை பூரா சம்பளம் கிடைக்கும் நாங்களும் யாருக்காவது வரி கட்டணுமே ஏமாளிகள் நாங்கள் ஏமாறணுமே


Karthik
ஏப் 23, 2025 20:55

25 வருஷத்துக்கு முன்னாடி தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கை விசாரிச்சி வந்த நீதிமன்றம் எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து கோடு போட சொல்லி இருக்குதுன்னா மெய்யாலுமே நீதிமன்றத்தை பாராட்டியே ஆகணும்.


venugopal s
ஏப் 23, 2025 20:14

இப்போது நீதிமன்றமும், நீதிபதிகளும் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் ஆகிவிட்டார்களா?


Arumugam
ஏப் 23, 2025 19:22

அடுத்த ஆட்சியில்..... திருட்டு திராவிடத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ.. கூட... சட்டசபைக்குள் செல்லக்கூடாது...


அப்பாவி
ஏப் 23, 2025 19:15

முதல்ல விடுவித்த நீதிபதியை விடுவியுங்க. துரை நிரபராதின்னு தீர்ப்பு வர வரைக்கும் அந்த நீதிபதியை விலக்கி வையுங்க.


அப்பாவி
ஏப் 23, 2025 19:13

பிசாத்து 3.92 கோடியெல்லாம் ஒரு பணம்?


RRR
ஏப் 23, 2025 18:54

சும்மா சொல்லக்கூடாது.... நீதித்துறை - வேற லெவல்...


RRR
ஏப் 23, 2025 18:49

லிப்ஸ்டிக் வாயனை உள்ளே போட்டு லாடம் கட்டலாமே...


எம். ஆர்
ஏப் 23, 2025 16:53

வெறும் 3.92 கோடிதானா?? இது இவனோட வீட்டு நாய்க்கு பிஸ்கட் வாங்கி போடவே பத்தாது பல வருடங்களாக கனிம வளங்கள் தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவையை சுற்றிலும் மொட்டை அடிச்சாச்சு வெறும் 3.92 கோடி என்றால் பிறந்த குழந்தை கூட நம்பாது 3.92 லட்சம் கோடியாக இருக்கும் கணக்கை சரிபார்க்கவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை