உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.சி.எல்., நிறுவனம் மீது நடவடிக்கையா? வாய்ப்பில்லை என்கிறார் கடலோரப்படை ஐ.ஜி.,

சி.பி.சி.எல்., நிறுவனம் மீது நடவடிக்கையா? வாய்ப்பில்லை என்கிறார் கடலோரப்படை ஐ.ஜி.,

சென்னை: ''இந்திய கடலோர காவல்படை வலுப்பெற்று வரும் நிலையில், ஜப்பானை போல பல்திறன் உடைய வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி., டோனி மைக்கேல் கூறினார்.இந்திய - ஜப்பான் நாடுகளின் கடலோர பாதுகாப்பு படை வீரர்களின் கூட்டும் பயிற்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.கூட்டுப் பயிற்சிஅந்த வகையில், கொரோனா தொற்று காரணமாக, 2020ல் இருந்து நடைபெறாமல் இருந்த கூட்டு பயிற்சி நேற்று நடந்தது.இந்த பயிற்சி மற்றும் ஒத்திகையில், ஜப்பானின் யஷிமா, இந்தியாவின் சவுரியா, சுஜய், சமுத்திரா பஹேதர், ராணி அபக்கா, அன்னி பெசன்ட், சி - 440, மட்ஷியா துருஷ்தி ஆகிய ஒன்பது கப்பல்கள், நான்கு ஹெலிகாப்டர், இரண்டு கடற்படை விமானங்கள் பங்கேற்றன.கப்பல் தீப்பற்றி எரிந்தால் எப்படி தீயை அணைப்பது, நடுக்கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடுபவர்களை மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற பயிற்சிகள் நடந்தன.மேலும், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.இதுகுறித்து, இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி., டோனி மைக்கேல் கூறியதாவது:ஜப்பான் கடலோர காவல் படையிடம், 550 கப்பல்கள், 150 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. இந்தியாவிடம், 70 கப்பல்கள் மற்றும், 75 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன.இந்தியா தொடர்ந்து கடலோர காவல்படையை வலுப்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில், இந்திய கடலோர காவல்படை, ஜப்பானிடம் நிறைய கற்றது. தற்போது, அந்நாடு நம்மிடம் அதிகம் கற்று வருகிறது.ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில், இருநாட்டு தொழில்நுட்பங்களும் பகிரப்படுகின்றன.எண்ணெய் கசிவுஜப்பான் கடலோர காவல்படையில் ஒரே வீரர், பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு பணிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஜப்பான் போல பல்திறன் உடைய வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எண்ணெய் கசிவு ஏற்பட்டால், தானாக அவை கடற்கரைக்கு வந்துவிடும். அந்த வகையில், சென்னை எண்ணுார் பகுதியில் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு உள்ளன.சம்பந்தப்பட்ட சி.பி.சி.எல்., நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்தால், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும். அதனால், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.துாத்துக்குடி வெள்ளப்பாதிப்பில், எட்டு குழு அமைத்து, 758 பேரை மீட்டுள்ளோம். மேலும், 7,000 கிலோ உணவுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 1999ல், ஜப்பான் வர்த்தக கப்பல் கடத்தலில், இந்தியா செய்த உதவிக்கு நன்றியாக, கூட்டுப் பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறோம். இதன் வாயிலாக, இரு நாட்டு அனுவபங்களை பகிர்ந்து கொள்வதுடன், வருங்காலங்களிலும் நட்பு வலுவடையும்.யூச்சி மொடயமாகேப்டன், ஜப்பானின் யஷிமா கப்பல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Gopalakrishnan
ஜன 13, 2024 11:40

இந்திய - ஜப்பானிய வீரர்கள் கூட்டும் பயிற்சியில் ஈடுபட்டார்களா ? எத்தனை விளக்குமாறுகள் பயன்படுத்தினார்கள் ?


ஆரூர் ரங்
ஜன 13, 2024 10:33

ஆனால் ஸ்டெர்லைட் மூடியதால் தாமிரப் பற்றாக்குறை ஏற்பட்டதை பற்றிக் கவலைப்படாமல் இருந்தார்கள். ஆலை முதலாளிகள் எந்த சாதி என்பதை???? பொறுத்தே கொள்கை.


மேலும் செய்திகள்