உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர்களே இல்லை! அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர்

டாக்டர்களே இல்லை! அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர்

சென்னை; சென்னை அருகே அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை, நோயாளிகள் தவிக்கின்றனர் என்று நடிகர் கருப்பு புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாய அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கால் வலி காரணமாக காமெடி நடிகர் கருப்பு சிகிச்சை பெற சென்றுள்ளார். அவர் சென்றிருந்த நேரம் மருத்துவமனையின் உள்ளே டாக்டர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4ikji204&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த மற்ற நோயாளிகள், மூதாட்டியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்தவர்கள், கருப்புடன் இணைந்து அவர்கள் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் இறங்கினர்.இதுகுறித்து கஞ்சா கருப்பு கூறியதாவது;லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு வேறு எங்கோ தனியாக கிளினீக் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.இதுபற்றி மருத்துவத்துறை அமைச்சர் பேச வேண்டுமா? இல்லையா? வெறிநாய் கடித்து ஒருவர் வந்திருக்கிறார். மண்டை உடைந்து மாணவர் ஒருவர் வந்துள்ளார். மருத்துவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு அவர் கொதிப்புடன் கூறி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Natchimuthu Chithiraisamy
பிப் 12, 2025 12:36

அரசு பஸ் 2000 வண்டிக்கு பிரேக் இல்லை


HoneyBee
பிப் 11, 2025 21:40

கருப்பு அண்ணா ஜாக்கிரதை.. நிறைய லாரிகள் பிரேக் சரியாக இல்லை என்று கேள்வி. நீங்கள் எதிர்த்து பேசினால் அம்புட்டு தான்


sankaranarayanan
பிப் 11, 2025 21:00

மாசு வை கேளுங்கள் எங்கே மருத்துவமனை மருத்துவர்கள் என்று. அவரகள் உடனே அந்த சார் எங்கே போயிருக்கார் என்றே தெரியவில்லை என்பார்கள் சார் வந்ததும் அந்த சார் யார் என்று சொல்கிறோம் என்பார்கள்.


Vijay
பிப் 11, 2025 18:15

சரி சரி உடனே அவருக்கு சங்கி பட்டம் கொடுங்கப்பா


Kjp
பிப் 11, 2025 17:57

அப்பாவி, சம்பத்து, வைகுண்டர் இவுங்களை எல்லாம் எங்கப்பா காணோம்.சீக்கிரம் வந்து முட்டு கொடுக்க சொல்லுப்பா.


Bahurudeen Ali Ahamed
பிப் 11, 2025 17:17

சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே அரசு மருத்துவர்கள் மருத்துவமனைகள் மீது கவனம் செலுத்துங்கள்,


Natchimuthu Chithiraisamy
பிப் 12, 2025 12:40

பிரைவேட் மருத்துவமனை மாத சந்தா வாராது என்பது அவருக்கு தெரிந்திருக்கும்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 11, 2025 16:52

எனுங்க அந்த மந்திரி சார் எங்கங்க ரெண்டு மூணு மாசமா காணலையே?


Mohammad ali
பிப் 11, 2025 19:34

அவரா அந்த சாரா. அவரு அண்ணா யூனிவர்சிட்டி பக்கம் போயிருப்பாரு


அசோகன்
பிப் 11, 2025 14:51

போய் தனியார் மருத்துவ மனையில் பாருங்க... இல்லைனா நேரா சுடுகாட்டுக்கு போய் படுத்துக்குங்க... இந்த அரசை குறை சொன்னா அப்புறம் கைது பண்ணிடுவோம்


Admission Incharge Sir
பிப் 11, 2025 15:39

வெறும் கைது மட்டுமல்ல, நீங்கள் பாத்ரூமிலும் வழுக்கி விழுவீர்கள். ஜாக்கிரதை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை