உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் 7 மணி நேரம் விசாரணை

நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் 7 மணி நேரம் விசாரணை

சென்னை: நடிகர் அர்ஜுன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகரும், சினிமா விமர்சகருமான, ‘பயில்வான்’ ரங்கநாதனிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் அர்ஜுன், நவ., 19ல் ஒரு புகார் அளித்தார். அதில், ‘என் மூத்த மகள் ஐஸ்வர்யாவையும், அவரது குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறி வைத்து, ஆதாரமற்ற மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள், முன் வைக்கப்படுகின்றன. எவ்வித ஆதாரமும் இல்லாமல், ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என, முத்திரை குத்துவதை ஏற்றுக்கெள்ள முடியாது. என் மூத்த மகள் குறித்து அவதுாறு கருத்துக்களை பரப்புவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் உட்பட இருவர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். நேற்று, விசாரணைக்கு ஆஜரான பயில்வான் ரங்கநாதனிடம், சைபர் கிரைம் போலீசார், ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை