உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக். பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம்: நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

பாக். பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம்: நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதல், பயங்கரவாத முகாம்கள் அழிப்பு உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sudksjkm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களின் கேள்விகளை எதிர்கொண்ட ரஜினிகாந்த் கூறியதாவது; பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து அங்கிருக்கும் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.இந்த போரை மிக வலிமையாக, திறமையாக, மிக வீரியத்துடன் கையாண்டு கொண்டிருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள், முப்படை வீரர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.முன்னதாக, பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கடலோடி
மே 12, 2025 09:24

ஓ நாட்டில் நடக்கும் அநியாயங்களை சினிமாவில் மட்டும் தட்டிகேட்கும் நபர் தானே நீங்க சரி சரி சூட்டிங்கு நேரமாச்சு கிளம்புங்க


G Ragavendran
மே 12, 2025 06:28

இந்திய ராணுவத்தை பாராட்ட இவர் ஒன்றும் விஞ்ஞானி கிடையாது. நன்றி சொல்லத்தான் வேண்டும்


raghasrin
மே 12, 2025 09:01

well said


திருட்டு திராவிடன்
மே 11, 2025 20:53

இவங்க வேற குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கிறார் பாரு. நீங்க எப்பொழுதும் கருத்து கந்தசாமி தான். உங்களால் யாருக்கும் எந்தவித நன்மையும் கிடையாது.


Sivagiri
மே 11, 2025 18:29

சரி , அதான் சொல்லீட்டர்ல , திரும்ப திரும்ப கேக்காதீங்கப்பா , அவரு ஒரு தடவ சொல்லீட்டார்னா அவளவுதான் . . . நாங்க என்ன வேற நியூஸ் எல்லாம் படிக்க வேண்டாமா . . .


நிமலன்
மே 11, 2025 17:21

ஐயையோ, இவர் இப்படி பாராட்டு தெரிவிக்கிறாரே! பாகிஸ்தானிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களே. தேசம் பெரிதா, நம் சொந்த நலன் பெரிதா ரஜினி அவர்களே? அவசரபட்டு யாரையும் பாராட்டாதீர்கள். இருவரும் உங்கள் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் ஒருவரை பாராட்டினால் மற்றொருவர் மனம் புண்படாதோ?


Rajan A
மே 11, 2025 16:35

இன்னும் கொஞ்ச காலம் கழித்து பாராட்டி இருக்கலாம்.