உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம்

ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : ‛‛அரசியல் நாகரிகம் தெரியாத நடிகர் விஜய், பிரதமர் மோடி பற்றி பேச அருகதை இல்லை. எனக்கு வரும் கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது,'' நடிகர் ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசினார். ‛பொன் விலங்கு' படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். தொடர்ந்து ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர வேடம் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். கோவையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kuz1q8gd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் ரஞ்சித் பேசியதாவது... ‛‛மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது சொடக்கு போட்டு பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார். 2014ல் கோவையில் பிரதமரை அவர் சந்தித்தபோது பூனைக்குட்டி போல் கையை கட்டிக் கொண்டு அமர்ந்ததை மறந்துவிட்டார் போல. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல, தம்பி மறந்துவிட்டார். மூளையில் பிரச்னை இருக்கு.மிஸ்டர் மிஸ்டர் என சொடக்கு போட்டு பிரதமர் மோடியை பேசுகிறார். நான் ஒரு வாக்காளன். ஒரு குடிமகனாக எனக்கு அப்பா யாரென்றால் அது மோடி தான். இன்றைக்கு உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரு தலைவர் மோடி. அவரை கைநீட்டி சொடக்கு போட்டு பேச விஜய்க்கு அருகதை இல்லை. முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரிகமா? அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை உள்ளது. எனக்கு வர கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓட்டால் குத்துவோம்''இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Venugopal S
ஆக 31, 2025 13:32

இங்கு பலரும் தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசும்போது எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது !


RAJ
ஆக 30, 2025 23:56

ஜெயலலிதா மட்டும் CMஆ இருந்தால் , விஜய் அங்கிள் பேண்டுள்ளேயே உச்சா போய் இருப்பார்..


Ramesh Sargam
ஆக 30, 2025 23:53

அரசியலில் முளைத்து மூன்று இலை விடவில்லை இந்த விஜய். அதுக்குள்ள உலகம் போற்றும் பாரத பிரதமரை சொடுக்கு போட்டு பேசுகிற அளவுக்கு தெனாவட்டா வேண்டாம் தம்பி. அடக்கி வாசிக்கணும் அரசியலில் முளைக்கும் போது.


M Ramachandran
ஆக 30, 2025 23:25

இதுக்கு எல்லாம் மோடி என்னும் மனிதர் கவலை படும் மனிதர் இல்லையெ. ராவுலை விடவா.நேத்தி பெய்த மழையில் இன்று முளைத்து வந்த காளான்.


சகாயம்
ஆக 30, 2025 22:38

விடுங்க சார். வயது முதிர்ந்த அளவுக்கு அறிவு வளர்ச்சி இல்லை.


Velayutham rajeswaran
ஆக 30, 2025 21:28

இந்த உணர்ச்சி இல்லாத தமிழக தலைவர்களுக்கு சொல்லவும்


நிக்கோல்தாம்சன்
ஆக 30, 2025 21:26

விஜய் ஒரு டூல்கிட் , அவனுக்கு ஆர்டர் எங்கிருந்தோ வரும் , அவன் எக்சிகியூட் பண்ணுவான் என்று நான் சொன்னால் நம்பவா போறீங்க


R.Balasubramanian
ஆக 30, 2025 20:41

என்னது சுடலை நாகரிகமாக பேசுகிறாரா?


ramesh
ஆக 30, 2025 22:24

உங்கள் கருத்திலே கூட நாகரீகம் இல்லையே . நீங்கள் நாகரீகத்தை பற்றி பேசுகிறீர்களா பாலசுப்ரமணியன்


krishna
ஆக 30, 2025 23:37

EERA VENGAAYAM RAMESH NAAGARIGAM ENDRAAL ENNA ENA THERIYUMA UMMAI PONDRA GOPALAPURAM KOTHADIMAI 200 ROOVAA OOPIS KUMBALUKKU.


vivek
ஆக 31, 2025 00:52

இருநூறு ரமேஷு...நீ ரொம்ப நல்லவன்


sankaranarayanan
ஆக 30, 2025 19:50

நீ வேண்டாமப்பா சும்மா இரு ...மக்களே சமயம் பார்த்து குத்திவிடுவார்கள்.


ராஜா
ஆக 30, 2025 19:46

வடக்கன்ஸ் தமிழ் மக்களுக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்று தெரிகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 30, 2025 20:11

தமிழகம், மேற்குவங்கம், கேரளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு எதிராக வடக்கன்ஸ் குரல் கொடுக்கிறார்கள் .... காரணம் அவர்களிடம் தேசிய நலன் பற்றிய உணர்வு இருக்கிறது ....


புதிய வீடியோ