உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.3.74 கோடி கடன் பாக்கி: நடிகர் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு

ரூ.3.74 கோடி கடன் பாக்கி: நடிகர் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் இல்லத்தை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த். (மூத்த மகன் ராம்குமாரின் மகன்). இவரும், மனைவி அபிராமியும் ஈஷன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரிலான சினிமா கம்பெனியின் பங்குதாரர் ஆக உள்ளனர். இந்த நிறுவனம் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜெகஜால கில்லாடி' என்ற பெயரில் படம் ஒன்றை தயாரித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j8rzf09k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3.74 கோடி கடன் பெற்றிருந்தனர். ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டியுடன் கடனை திருப்பி தருவதாக அவர்கள் உறுதி அளித்திருந்தனர்.ஆனால் இந்த விவகாரத்தில் வாக்குறுதி படி அசலையும், வட்டியையும் துஷ்யந்த் தரப்பில் திருப்பித் தரவில்லை. இதையடுத்து, இவ்விவகாரத்தில் தீர்வு காணும் பொருட்டு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ரவிந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.அவரின் விசாரணையைத் தொடர்ந்து கடன் தொகை, வட்டி என மொத்தம் 9 கோடியே 2 லட்சத்து 40,000 ரூபாயை வசூலிக்க ஏதுவாக ஜெகஜால கில்லாடி என்ற படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ஒப்படைக்கும்படி 2024ம் ஆண்டு மே 4 ம் தேதி நீதிபதி ரவிந்திரன் உத்தரவிட்டு இருந்தார். உரிமத்தை விற்று கடன் தொகையை ஈடு செய்து, மீதி தொகையை தயாரிப்பு நிறுவனமான ஈஷன் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தனது உத்தரவில் கூறி இருந்தார். இந்த உத்தரவின் படி, பட உரிமையை கோரும் போது, படம் முடியவில்லை என்று துஷ்யந்த் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.இதையடுத்து, மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடுமாறு தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய ஈஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கும் தகவல் தெரிவிக்குமாறு ஆணையிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (மார்ச். 5) ஒத்தி வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Sampath Kumar
மார் 05, 2025 17:29

ஐயோ என்ன ஒரு கொடுமை சரவணன் சார் சிவாஜி ராவ் என்று பெயரு ஐந்து கொண்டு வாய்க்கு வாய் சிவாஜி அவரை புகழ்ந்தால் மட்டும் போதாது அந்த மாபெரும் நடிகனின் இந்த இழிநிலைக்கு உதவ முன் வர வேண்டும் நடிகர்கள் குறிப்பாக்க கமல் , ரஜினி செய்வார்களா


Siva Subramaniam
மார் 04, 2025 23:33

This reminds about change of hands in the cases of Saravana Bhavan and Adayaar Ananda Bhavan.


Iyer
மார் 04, 2025 08:49

30% வட்டி வசூலிப்பது சட்டப்படி குற்றம் அல்லாவா? இது அநியாயம். இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. 12% மேல் வட்டி வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.


metturaan
மார் 04, 2025 07:26

எல்லாமே ஒரு நம்பிக்கை தான்... கடன வாங்கிடுவோம்.. கட்டாமல் பிரச்சினை ஆகும்போது திரைத்துறையின் பீஷ்மர் வீடு என்பதால்... முன்னணி நட்சத்திரங்கள் நிச்சயமாக போட்டி போட்டுக்கொண்டு வந்து காத்து கண்டிப்பாக மீட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையில் கூட இருக்கலாம்...


Parthiban
மார் 03, 2025 21:32

30% என்று ஒப்புக் கொண்டு கடன் வாங்கிய பிறகு, அசல் மற்றும் வட்டி யுடன் சேர்த்து கட்டுவது தான் நியாயம் . 30% வட்டி 100 த்க்கு 2.75 ருபாய் இது அநியாய வட்டி அல்ல. 100 கங்கு 3 ருபாய் என்பது சாதாரணமானது. அதுவும் திரை துறையில் இது மிக குறைவு. வியாபாரம் செய்ய பொது துறை வங்கி 13% வரை, தனியார் வங்கியில் 15% லிருந்து 36% வரை . 36% என்பது ருபாய் 100 க்கு 3/ வட்டி. கந்து வட்டி என்பது 5/ வட்டி 10 வட்டி அதற்கு மேல். திரைப்படம் எடுக்க கடன் கொடுக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. லாபம் வந்தால் தூக்கி விடும், அனுபவம் இல்லாதவர்கள் திரைப்படம் எடுத்தால் நஷ்டம், அதிர்ஷ்டம் இருந்தால் பிழைத்து கொள்வார்கள். சில பேர் கீழே கூறுவது போல் , இது கந்து வட்டி ஆகாது . சட்டப்படி 36% வட்டி வாங்கலாம்.


பிரேம்ஜி
மார் 04, 2025 07:31

கந்துவட்டி என்றால் 120 %. இதற்கு பத்து வட்டி என்று பேர். 30% ஒன்றும் அதிக வட்டி இல்லை.


Karthik
மார் 03, 2025 21:25

பெரிய இடம்னா பர்சன்டேஜும் பெருசா தானே இருக்கும். அதனாலதானே விசாரணை நடத்த தனி ஒருநபர் ஓய்வு நீதிபதியை அமர்ந்து கிறார்கள்.


N Annamalai
மார் 03, 2025 20:31

திரைத்துறையின் நடிகர் நடிகைகள் ஒன்று சேர்ந்து மீட்கலாம் .வட்டி இல்லா கடன் கொடுக்கலாம் .அவர் மானத்தை காப்பாற்றலாம்


தமிழன்
மார் 03, 2025 18:16

நீதிமன்றம் 30% வருட வட்டி என்று குறிப்பிடுகிறது.. அப்படியானால் இது அதிகப்படியான வட்டி இல்லையா ? இதை நீதிமன்றம் ஒரு பொருட்டாக எடுத்ததாக தெரியவில்லையே.? ஏன்


M. PALANIAPPAN, KERALA
மார் 03, 2025 17:29

மாபெரும் நடிகர், இந்த செய்தியை கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது


அப்பாவி
மார் 03, 2025 16:01

முப்பது பர்சண்ட் - கந்துவட்டிய விட மோசமா இருக்கே.


புதிய வீடியோ