இனி ஹீரோ தான் நடிகர் சூரி பளீச்
கோவை: ''ஹீரோவாக நடிக்க கைவசம் படங்கள் இருப்பதால், இனி, காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்பில்லை,'' என்கிறார் நடிகர் சூரி.கோவையில் அவர் கூறியதாவது:ஓ.டி.டி., தளங்கள் வருகையால், தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சொல்வது தவறு. ஹீரோவாக நடிக்க கைவசம் படங்கள் இருப்பதால், இனி காமெடி பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பில்லை. 'வெண்ணிலா கபடிக்குழு' போன்ற கதை சொன்னால், கண்டிப்பாக ஹீரோவாக நடிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.