உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குப்பை கொட்டும் பேரூராட்சி; நடிகர் வடிவேலுவுக்கு அதிர்ச்சி

குப்பை கொட்டும் பேரூராட்சி; நடிகர் வடிவேலுவுக்கு அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: திருப்புவனம் பழையூரில் நடிகர் வடிவேலு இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாதமாக குப்பைகளை கொட்டி வருவதாக அவரது உதவியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.நடிகர் வடிவேலு மனைவி சொந்த ஊர் திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர். மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை வடிவேலு விலைக்கு வாங்கி இருந்தார். நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் வழங்கியது போக நான்கு வழிச்சாலையின் இருபுறமும் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ofkwm7ix&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலத்தில் திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டியுள்ளது. இதனால் நிலம் மாசுபடுவதாக பல முறை வடிவேலுவின் உதவியாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் செயல் அலுவலர் சங்கர்கணேசிடம் புகார் அளித்துள்ளனர்.உதவியாளர்கள் கூறுகையில், குப்பைகளை கொட்ட கூடாது என பலமுறை வலியுறுத்தியும் மீண்டும் மீண்டும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அகற்றவும் மறுக்கின்றனர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Chandrasekaran Balasubramaniam
மார் 21, 2025 12:12

சாதாரண 200 உ பி ஸ் எல்லாம் என்னென்னவோ காரியம் சாதிக்கிறானுக. இவராலே முடியலையா.


S.jayaram
மார் 21, 2025 06:47

அவர்தான் மாமன்னர் ஆயிற்றே இளவரசரிடம் சொன்னால் உடனே அவர்கவனித்துக் கொள்வார்.


Bhaskaran
மார் 20, 2025 19:53

இது போதாது ன்னு மலக்கழிவையும் கொட்டு வாங்க


Shanmugaraj Ramachandran
மார் 20, 2025 19:24

இதுவும் வேனுமா , இன்னமும் வேனுமா தம்பி வடிவேலு உங்கள் தலையில் குப்பை கொட்டவில்லை என்று சந்தோசபடுங்கள்.திமுகவின் கூஜாதானே நீங்கள் அனுபவி ராஜா அனுபவி...


Karthik
மார் 20, 2025 19:23

நல்லா விசாரிங்கோ.. பேரூராட்சி / நகராட்சி க்கு வரி ஏதும் கட்டாம டிமிக்கி குடுத்திருப்பார்.. இப்பெல்லாம் வரி வசூல் பண்ண கார்ப்பரேஷன் ஆளுங்கோ இந்த குப்பை டெக்னிக்கைத்தான் பயண்படுத்துறதா செய்தி..


நரேந்திர பாரதி
மார் 20, 2025 16:17

சேட்டன்களிடம் சொன்னால், ரெண்டே நாளில் இடத்தை மருத்துவ கழிவுகளால் நிரப்பி விடுவார்கள்


Siva Kumar
மார் 20, 2025 15:14

ஸ்டாலின் ஐயா நல்லா ஆட்சி நடத்துறாரு.. சின்னவரு கேட்கவே வேண்டாம். தமிழக அரசு சிறப்பாக இருக்கிறது அப்படினுலாம் சமீபத்துல வடிவேலு பேசுனாரு.. இப்போது அதிர்ச்சியாம்ல....


Tiruchanur
மார் 20, 2025 13:49

சரியான சமிஞையை தான் கொடுத்திருக்காங்க


கத்தரிக்காய் வியாபாரி
மார் 20, 2025 13:23

தீயமுகவினால் கெட்ட ஒரு காமெடி சொம்பு


அசோகன்
மார் 20, 2025 13:02

வடிவேலு திமுகவின் சொம்பு.. அதில் கொட்டாமல் வேறு எங்கே திமுக அரசு குப்பையை கொட்டும்.. சொம்பு நிறைந்தால் அடுத்த சொம்பில் கொட்டுவோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை