உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர்கள் படம் எரிப்பு: 55 பேர் கைது

நடிகர்கள் படம் எரிப்பு: 55 பேர் கைது

திண்டுக்கல்: நடிகர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ.,கட்சி சார்பில் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு தனியார் தியேட்டர் முன் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அப்துல் லத்தீப்,பொது செயலாளர் சையது,மாவட்ட பொருளாளர் தவுபிக்,தொகுதி தலைவர் சேக்அப்துல்லா,செயலாளர் நசீர்,மாவட்ட செயலாளர் அங்குசாமி முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் உருவ படத்தை எரித்தனர். அங்கிருந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுலைமான்
நவ 09, 2024 21:46

தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசும்,செயல்படும் தொடக்கநிலை தீவிரவாதிகளை தூக்கிலிட வேண்டும்


sankaranarayanan
நவ 09, 2024 18:16

எஸ்.டி.பி.ஐ.,கட்சி சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் செய்ய எப்படி இந்த அரசு அனுமதி அளித்தது முளையிலேயே கிள்ளி எரியாவிடில் அரசு இவர்களால் பெரும் சேதத்தை அனுபவிக்க நேரிடும் .இது இந்திய நாடு.


Ganesun Iyer
நவ 09, 2024 13:39

கவுண்டமணி : உனக்கு எதுக்கு இந்த வேல.. செந்தில் : எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு....த்...தான்...


mei
நவ 09, 2024 13:03

அத்தனை தீவிரவாதிகளையும் உள்ளே தள்ளனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை