உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், கடந்த 23ல் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் ஜாமின் கோரி, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zakh2acl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும். ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமினும், ரூ.10 ஆயிரத்துக்கான இரு நபர் ஜாமினிலும் இருவரையும் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sasikumaren
ஜூலை 09, 2025 03:59

லஞ்சம் மிகவும் சக்தி மிகுந்தது அதிகாரிகள் அரசியல் வியாதிகள் நீதிபதிகள் என்று யாரும் விதிமுறைகள் ஆண்டுக்கு இத்தனை கோடிகளை குவித்து விட வேண்டும் என்ற குறிக்கோளில் சுற்றுகிறார்கள்.


Mani . V
ஜூலை 08, 2025 17:39

அப்பா குடும்பம் ஹாப்பி


rajan_subramanian manian
ஜூலை 08, 2025 17:07

ஊரை அடித்து உலையில் போட்டவன், நாட்டையே காட்டிக்கொடுத்தவன், பாலியல் குற்றவாளி, கொள்ளை கொலையில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள். எல்லா அரசியல் தலைவர்கள், கஞ்சா, கோகைன் மொத்த விற்பனையாளர்கள் ஆகிய எல்லோருக்கும் மீன் கிடைக்கும் போது ஒரு கிராம் ரெண்டு கிராமுக்கு இல்லையா என்ன?


Palanisamy Sekar
ஜூலை 08, 2025 16:53

போதை பொருளை பயன்படுத்திய பலரில் சிலரை மட்டுமே கைது செய்து விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்ற காவல்துறையானது ஏன் போதைப்பொருள் விற்பனையாளர்களை பற்றிய விவரங்களை வெளியிடுவதில்லை. மேலும் அவர்கள் மீது ஏன் கைது நடவடிக்கையை மேற்கொள்வதில்லை? ஜாபிர் சாதிக் எனப்படும் போதைப்பொருள் வியாபாரியும், அவனது நண்பன் சினிமாத்துறையை சார்ந்த திமுக அனுதாபி அமீர் மீதும் நடவடிக்கை இதுபோல பாயவில்லை? ஆளும் தரப்பின் ஆதரவாளர்கள் என்பதாலா? போதை பொருள் பயன்படுத்துவோரை விட அப்பாவியா இந்த போதை பொருள் வியாபாரிகள்? ஒண்ணுமே புரியலையே


SANKAR
ஜூலை 08, 2025 17:05

the persons mentioned by you arrested put in jail and case is going on in court .in current matter also supplier arrested


sundarsvpr
ஜூலை 08, 2025 16:46

ஒரு சாதாரண தொழிலாளி குடித்தால் ஜாமீன் கிடைக்காது. இவன் பணத்திமிரால் அல்ல. இதற்கு எதிர்மறையானவர்கள் நடிகர்கள் வசதி படைத்த அரசியல்வாதிகள். இவர்களுக்கு சிறையில் வசதிகள் உண்டு. நீதிமன்றம் ஜாமீனும் கொடுக்கின்றன. இந்த இரண்டு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி ஏன் நீதிமன்றத்தின்மீது வழக்கு ஏன் பொதுமக்கள் தொடர பயன்படுகின்றன. இது மட்டுமல்ல ஒரு அமைச்சர் குறிப்பாய் தலைமை அமைச்சர் ஒரு பகுதிக்கு வந்தால் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் நடுரோட்டில் கால் கடுக்க நிற்கிறாம் இது பற்றியும் நீதிமன்றம் ஏன் தானாக வழக்கு தொடங்கக்கூடாது.


ASIATIC RAMESH
ஜூலை 08, 2025 16:34

நல்ல்ல்ல தீர்ப்பு..... மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது... அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.... அப்புறம் இனி என்ன விசாரணை இந்த கோர்ட்டுக்கு தேவைப்படுகிறது... பாமரமக்கள் என்றால் இப்படி விடுவார்களா? அல்லது பாமர மக்களுக்கு குடும்பம் எதுவும் இல்லையா?....


Senthoora
ஜூலை 08, 2025 16:54

இனி என்ன அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் பண்ணுவாங்க, கேஸ் அம்போ, போலீசுக்கு பை, பை மக்கள் வரிப்பணம் வேஸ்ட்.


RRR
ஜூலை 08, 2025 16:28

இவனுங்க ஒரு கிராம் கோகைன் வாங்குற செலவை விட ஜாமின் தொகை ரொம்ப கம்மி...


RRR
ஜூலை 08, 2025 16:27

விலை ரூ.10ஆயிரம் மட்டுமே...