உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் நடிகர் அஜித் அட்மிட்!

மருத்துவமனையில் நடிகர் அஜித் அட்மிட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல நடிகர் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா ஷூட்டிங். கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல் என எப்போதும் தன்னை பிசியாகவே வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். அண்மையில் இவரது நடிப்பில் 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g2013k0r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவருக்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து நேற்று அவர் சென்னை திரும்பி இருந்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் அஜித் காலில் லேசான காயம் ஏற்பட்டது.இந் நிலையில் அஜித் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அண்மையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடந்தது. அது தொடர்பான அடுத்தக்கட்ட பரிசோதனைக்காகவும், நேற்று ஏற்பட்ட காயம் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.அஜித்குமார் மருத்துவமனையில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அஜித் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் அவரது தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Easwar Kamal
ஏப் 30, 2025 18:18

சும்மா ஒன்னும் இல்லைனு கதை விடுறானுங்க. கண்ணனுக்கு கீலே 2 கிலோ சதை தொங்குது.சினிமாவுல காலம் தள்ளணுமே அதுக்காக ஒன்னும் இல்லை–ன்னு கதை வேற.


VSMani
ஏப் 30, 2025 17:29

இந்த செய்தி ரொம்ப முக்கியம். என் தான் தினமலர் இதெல்லாம் ஒரு செய்தின்னு போடுதோ?


V Venkatachalam
ஏப் 30, 2025 16:23

அஜீத் ஒருத்தர் தான் டெக்னாலஜி திருடர் கட்டு மரம் கருணாநிதியை எதிர்த்தவர். மற்ற நடிகர்கள் கட்டு மரம் கருணாநிதி காலில் விழுந்து ஐக்கியமானார்கள் He is such a brave man. விரைந்து நலம் பெற பிரார்த்திக்கிறேன்.


Vijay D Ratnam
ஏப் 30, 2025 14:47

ரெண்டு படம் ஹிட் அடித்தால் முதலமைச்சர் நாற்காலி கனவு வந்துவிடும் தமிழ் சினிமா உலகில் அஜித் தனித்துவம் மிக்கவர். தனது ரசிகர்மன்றத்தை கலைத்த பிறகும் தமிழகத்தில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகர் அஜித்குமார். அனைவராலும் விரும்பப்படும் அவர் அரசியலுக்கு வரவேண்டாம். ஆனால் சமூகத்துக்கு மறைந்த நடிகர் விவேக் போல் தன்னால் இயன்ற சேவைகளை செய்யலாம்.


palaniraj
ஏப் 30, 2025 14:45

நல்லா ப்ரோமோடீ பண்ணுறீங்க


நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 16:15

யாரு சாமி நீங்க தளபதியின் தூதுவரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை