உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய், இ.பி.எஸ்.சை உசுப்பேற்றிவிடும் தி.மு.க.! நடிகை கஸ்தூரி சொல்லும் 2026 பாலிடிக்ஸ்

விஜய், இ.பி.எஸ்.சை உசுப்பேற்றிவிடும் தி.மு.க.! நடிகை கஸ்தூரி சொல்லும் 2026 பாலிடிக்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: நடிகர் விஜய், இ.பி.எஸ்., உள்ளிட்டோரை உசுப்பேற்றி பிரித்தாளும் அரசியலை தி.மு.க., கையாள்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.திருச்சியில் அவர் அளித்த பேட்டி விவரம்; விஜயின் அரசியல் ஒரு பெரிய ஜாக்பாட். தி.மு.க.,வுக்கு எதிராக அ.தி.மு.க., தான் என்று எப்போதும் இருந்தது. தமிழகத்தில் உதயசூரியனுக்கு எதிர் இரட்டை இலைதான் என்பது 60 ஆண்டு காலமாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qitq621k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிலும் நடிகர் விஜய் தமது கட்சிக்கு இன்னமும் சின்னமே வாங்க வில்லை. என்ன சின்னம் வாங்க போகிறார் என்பதும் தெரியவில்லை. விஜயை முன்னிறுத்தி அ.தி.மு.க.,வின் வீச்சையும், உண்மையாக முகத்தையும் தி.மு.க.,வினர் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம். ஒரு கட்சிக் கூட்டணிக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்த அனைத்துக் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும். எல்லா மக்களும், ஏதோ ஒரு பிரச்னைக்கு ஆளும்கட்சி தான் காரணம் என்ற மனோநிலைக்கு வந்துவிட்டனர்.சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 4000 கோடி ரூபாய்க்கு நிறைவேற்றப்பட்ட பணிகள் கை கொடுக்கவில்லை. ஆனால் அடுத்த நாளே தண்ணீர் வடிந்தது. இதற்கு அவர்களின் திட்டமே காரணம் என்றால் அது இல்லை.ரோட்டில், மூலைக்கு மூலை மோட்டார் வைத்து அனைத்து தண்ணீரையும் வெளியேற்றிவிட்டனர். பேசாமல் 4000 கோடி ரூபாய்க்கு, பம்பும், மோட்டாரும் வாங்கி கொடுத்திருக்கலாம். மக்கள் எல்லாருக்கும் இது நன்றாகவே தெரிகிறது. எல்லாரும் வெறுப்பில் உள்ளனர். அதையும் மீறி ஜெயிக்க வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. அதற்காகவே விஜய், இ.பி.எஸ்., அண்ணாமலை ஆகியோரை உசுப்பேற்றி பிரித்தாளும் அரசியலை செய்கின்றனர். சீமான் இம்முறையும் தனியாக தான் தேர்தலில் நிற்பேன் என்று கூறி உள்ளார். நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட போது எனக்கு முதல் ஆதரவு குரல் தந்தவர் அவர்.அவருக்கு நான் நன்றி கூறிவிட்டேன். அந்த நன்றியின் வெளிப்பாடாக கூறுகிறேன். மக்களின் ஒரே ஆசை தி.மு.க.,வை வெளியேற்றவேண்டும் என்பது. எல்லாரும் ஒன்று சேர்ந்து, அதை செய்துவிட்டு பின்னர் அவரவர் கொள்கையை பற்றி பேசலாம் என்று நான் சொல்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

எவர்கிங்
டிச 09, 2024 07:37

வழக்கம்போல எதிர் கட்சிகள் நவக்கிரகம் போல் நெல்லிக்காய் மூட்டை போல் இருந்தால் தி.மு.க கூட்டணியை வெல்வது இயலாத ஒன்று


RAMAKRISHNAN NATESAN
டிச 09, 2024 11:26

அதனால்தான் விஜய் கூட்டணியை விரும்ப மாட்டார் .... நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி தனித்தே நிற்பார் .....


Barakat Ali
டிச 08, 2024 19:05

விஜயை முன்னிறுத்தி அ.தி.மு.க.,வின் வீச்சையும், உண்மையான முகத்தையும் தி.மு.க.,வினர் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம் ............ விஜய்யை இறக்கியது திமுகதான் என்று பலரும் உணர்கிறார்கள் .....


Dhurvesh
டிச 08, 2024 18:55

அம்மணி,ஆதவா அர்ஜுனா வெச்சி எல்லாம் செய்த தில்லாலங்கடி வேலையை முறியடித்து விட்டார்கள் DMK வினர். நீங்கள் எம்மாத்திரம்...


Dhurvesh
டிச 08, 2024 18:53

சனாதனி கோர்ட்டில் என் வீட்டில் ஒரு மேண்டலி retrard குழந்தை உள்ளது என்றும் PP–யும் எதிர்ப்பு தெரிவிக்காததால் தான் அம்மணி இப்போ வெளியே ஜாமினில். அனால் ஒன்று! ஜெயா,எடப்பாடி, அண்ணாமலை, சீமான் இப்படி DMK வை ஒழிப்பேன் என்று சொல்லி இன்று போய் விட்டார்கள்.


Indian
டிச 08, 2024 18:48

உங்கள் ஆசை மக்கள் ஆசை அல்ல


Anantharaman Srinivasan
டிச 08, 2024 20:29

கஸ்தூரியின் ஆசையல்ல. இந்துக்களின் ஆசை.


Kalyanaraman
டிச 08, 2024 18:48

நேரடியாக கூட்டணி என்று இல்லையென்றாலும் தொகுதிகளை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தேர்தலை சந்தித்தால் திமுகவின் தோல்வி சதவிகிதம் அதிகமாகும்.


SwathySanthoshPriya Ganesan
டிச 08, 2024 18:47

உண்மையிலேயே அறிவான மக்கள் சிந்திக்க வேண்டும் நமக்கு எது நன்மை தரும் என்று கேரளா போன்ற சிந்தனை வேண்டும் நமக்கு சட்டமன்றம் என்றால் ஒரு கட்சிக்கும் அதாவது சட்டமன்றம் என்றால் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு காட்சிக்கும் பாராளுமன்றம் என்றால் பாராளுமன்றத்தில் உள்ள தேசியக் கட்சிக்கும் தான் ஓட்டு போட வேண்டும் அப்போதுதான் நம்முடைய மாநிலத்திற்கு நன்மை கிடைக்கும் இவர்கள் செய்கிற தவறு என்னவென்றால் இரண்டுக்குமே ஒரே கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள் அதனால் தான் நமக்குரிய நன்மை எதுவுமே கிடைப்பதில்லை ஜிஎஸ்டி என்னுடைய தொகை நமக்கு வருவதில்லை காரணம் நாம் அவர்களுக்கு ஓட்டு போடாது எந்த சலுகைகளை தர மாட்டார்கள் இதனால் நாம்தான் அவதிப்பட வேண்டும் இன்றைக்கு பிஜேபி பிஜேபி வெறுப்பு அரசியல் என்று நான் சொல்லுகிறோமே இதையும் மாற்றி நீங்கள் ஓட்டு போட்டீர்கள் என்றால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் முழுவதும் நமக்கு வந்துவிடும் பைசா வடை 10 மடங்கு நமக்கு கிடைக்கும் இதை ஏன் புரிந்துகொள்ள இந்த மக்கள் தயாராக இல்லை இது எவ்வளவு பெரிய தவறு இந்த கட்சியை திராவிட கட்சியை ஆளுபவர்கள் செய்த தவறும் தான் மக்களை முட்டாளாக்கி இப்படி செய்கிறார்கள் இதை நீங்கள் தான் புரிந்து நடந்து கொள்ளும் நமக்கு நன்மைதான் தேவை இந்த கட்சியில் தேவையில்லை நீங்கள் பாராளுமன்றத்துக்கு ஒரு ஓட்டு கூட இந்த திராவிட கட்சிகளுக்கு போடக்கூடாது சட்டசபைக்கு தேசிய கட்சிக்கு போட வேண்டாம் நியாயமான முறையில் சட்டசபைக்கு மாநிலக் கட்சிகளுக்குப் போட்டால் போதும் தேசிய கட்சிகள் நமக்கு தேவையில்லை ஆனால் பாராளுமன்றத்திற்கு மாநில கட்சிகளுக்கு ஒரு ஓட்டு கூட போடக்கூடாது இதுதான் உண்மையிலே மக்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய ஒரு வழி


sankaranarayanan
டிச 08, 2024 18:22

அம்மாவின் அடுத்த அவதாரம் என்றே இவரை சொல்லலாமே துடுப்பானவர் நாணயமானவர் மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் நேர்மையானவர் சிறைச்சாலை சென்றவர் பார்க்கலாம் இவருடைய அரசியல் பங்கு எவ்வளளவு தூரம் மக்களுக்கு உதவும் என்று.


Dhurvesh
டிச 08, 2024 18:58

மோடி 3–வது தடவை PM, அப்போ இதுவும் மன்னராட்சி தானோ


Barakat Ali
டிச 08, 2024 21:33

மோடி 3–வது தடவை PM, அப்போ இதுவும் மன்னராட்சி தானோ ..... குடும்ப வாரிசை கொண்டு வந்து துணை பிரதமர் ஆக்கினாரா ???? குடும்ப உறுப்பினர்களை கொண்டுவந்து அரசியலில் ஈடுபடுத்தினாரா ????


Pandianpillai Pandi
டிச 08, 2024 18:11

யாரையும் உசுப்பேற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தி மு க விற்கு இல்லை என்பதை எதை தின்னால் பித்தம் தனியும் என்று திரிகின்ற பா ஜ க நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக உடல் நிலை சரியில்லாத தருனத்தில் கலைஞர் அவர்கள் தான் முதலமைச்சருக்கு சிகிச்சை அளிப்பதில் மர்மம் இருக்கிறது . முதலமைச்சருக்கு சரியான சிகிச்சையளிப்பதை உறுதிபடுத்தவேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் கலைஞர் அவர்கள். எந்த கட்சியையும் அழிக்க நினைத்தோ அல்லது தாழ்வாக கருதியோ என்றைக்கும் நடவடிக்கை எடுத்ததில்லை. வாஜ்பாய் அவர்களை நம்பி அவர்களுக்கு தோழ் கொடுத்த கட்சிதான் தி மு க வாஜ்பாய் காலத்தில் தி மு க வின் சாதனை திட்டங்களை இன்றளவும் மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சற்றும் நன்றியில்லாமல் தி மு க வை வசைபாடுவது பா ஜ க தான். தி மு க மக்களாட்சி செய்து வருகிறது.


முருகன்
டிச 08, 2024 17:24

உங்கள் ஆசை மக்கள் ஆசை ஆகாது


Duruvesan
டிச 08, 2024 17:56

எல்லோரும் சேர்ந்து நின்னா 27% தீயமுக கூட்டணி ஜெயிக்காது


sankar
டிச 08, 2024 18:15

அவரது ஆசையில் என்ன தவறு இருக்கிறது


முக்கிய வீடியோ