உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுக்கு ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா; கேட்கிறார் குஷ்பு

உங்களுக்கு ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா; கேட்கிறார் குஷ்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா என்று தி.மு.க.,வுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரையில் பா.ஜ.. மகளிர் அணியினர் தடையை மீறி நீதி பேரணி செல்ல முயன்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய மாஜி உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில், சென்னையில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது; பாலியல் குற்றங்களில் இது அந்த மாநிலம், இந்த மாநிலம் என்று அரசியலில் கம்பேர் செய்யாதீர்கள். நான் இப்போது தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தை பற்றியே தான் அதிகம் பேசுவேன். ஏன் என்றால் இது பா.ஜ., தி.மு.க., அ.தி.மு.க., என்று எதுவும் கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டு வருகிறோம். இங்கு தமிழகத்தில் அவர்கள் (தி.மு.க,) ஆட்சியில் நடக்கும் போது போராட்டம் பண்ண மாட்டார்கள். எதிர்க்கட்சியாக தி.மு.க., இருக்கும் போது என்ன செய்தது? ஸ்டாலின் என்ன கேட்டார். அரசியல் பண்ணாமல் அவியலா பண்ண முடியும் என்றார். அவர் (ஸ்டாலின்) மட்டும் பண்ணும்போது அவியல் செய்வீர்கள். நாங்கள் பண்ணும் போது வேறமாதிரி இருக்கிறதா உங்களுக்கு? ஏன் உங்களுக்கு (தி.மு.க.,) வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?. என்ன வகையில் நியாயம் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Azar Mufeen
ஜன 05, 2025 05:12

நீங்க ராகுல் காந்தியை ஊருக்குள்ள வரவிடாம கைது செஞ்சா சட்னி,இவனுங்க உங்கள கைது செஞ்சா ரத்தமா இந்த ரெண்டு கட்சியும் திருந்தவேமாட்டீங்களாடா


T.sthivinayagam
ஜன 04, 2025 19:55

பாஜக மாநில தலைவராக குஷ்பு அவர்களே இருக்கலாம். அவருக்கு மக்கள் ஆதரவு, ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 04, 2025 19:13

திருந்தும் அறிகுறிகளும் இல்லை. குற்றம் நடந்தது. வெகு விரைவில் குற்றவாளி காவலில் எடுக்கப்பட்டு, FIR ம் போட்டாச்சு. விசாரணை நடக்கிறது. நீதிமன்றமே தனியாக ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அவர்களும் விசாரணை ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இதைப் பிடித்து தொங்கிக் கொண்டு.. என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்???


M Ramachandran
ஜன 04, 2025 17:39

தற்போது நிலமை தலமை உட்பட போலீஸ் போர்ஸ் அரசு அரசியல் தலமை யின் சொந்த காவல் துறையாகா செயல் படுகிறது என்பது வருத்தத்திற்குரியது ஆகும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 04, 2025 15:00

நீங்க இருந்த கட்சிதான் ...


அப்பாவி
ஜன 04, 2025 14:26

மணிப்பூர்ல வந்தா கெட்சப் இல்லையா கண்ணகி மேடம்?


கூமூட்டை
ஜன 04, 2025 15:32

ஊசிப்போன சுண்டல் யாருக்கு வேனும். கூ மூட்டை திராவிட முன்னேற்றக் கழகம் மாடல் அரசு சரியான முறையில் நடக்க வேண்டும்


sivan
ஜன 04, 2025 16:06

டேய் அப்பாவி மணிப்பூருக்கு மெழுகு வர்த்தி ஏற்றிய உங்க குல விளக்கு இப்போது எங்கே போனாங்க / ..மணிப்பூருக்கு ஏற்றும்போது சந்தோஷமாக இருந்தது.. இல்லையா .. இப்போதும் நம்ம மாநில பெண்ணுக்கு சந்தோஷமாக ஏற்ற வேண்டியதுதானே. ..என் கோபம் வருது உங்களுக்கு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 04, 2025 16:06

அப்பாவி முரசொலி அறிவாளி.... பொதுஜனம்: டாக்டர் இந்தம்மா ரோட்டில் நடந்து செல்லும்போது மயங்கி விழுந்து விட்டார்கள் சிகிச்சை அளியுங்கள்.... அந்த அம்மாவை தெரிந்தவர்: ஏன் மணிப்பூரில் ஒரு அம்மா சாலை விபத்தில் சிக்கினாரே அவரை காப்பாற்ற வக்கில்லை இவரை காப்பாற்ற வந்து விட்டாயாக்கும் போ...போ... பொது ஜனம்: ????


Kumar Kumzi
ஜன 04, 2025 17:21

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட மணிப்பூர் எங்க இருக்கு அங்க இருப்பவர்களின் தோற்றம் எப்படி இருக்கும்னு சொல்லு கூமுட்ட


raja
ஜன 04, 2025 17:33

எண்டா கூமுட்ட கொத்தடிமையே கலியுக பாஞ்சாலி இதுக்கு யேன் விளக்கு புடிச்சு போராட்டம் நடதுலெண்ணு கேக்க துப்பு இல்லை வந்துட்டான் குஷ்புவோட இத கழுவ...


சமீபத்திய செய்தி