கே.எஸ்.ஆர்., எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள்
* சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 24ம் தேதி செங்கோட்டை செல்லும் வாராந்திர ரயில், 25ம் தேதி செங்கோட்டையில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில், கூடுதலாக சேரன்மாதேவி, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நிறுத்தங்களில் நின்று செல்லும் என, ரயில்வே அறிவித்துள்ளது. * சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும்,- கே.எஸ்.ஆர் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் 22ம் தேதியில் இருந்தும், கே.எஸ்.ஆர். பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் 23ம் தேதியில் இருந்தும், 'சேர் கார்' எனும் இருக்கைகளுடன் கூடிய, இரண்டு பெட்டிகள் நிரந்தரமாக பொருத்தப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.