உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஸ்போர்ட் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

பாஸ்போர்ட் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை:சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன், கூடுதல் பொறுப்பாக, வெளியுறவு அமைச்சகத்தின், சென்னை கிளை செயலகத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்று உள்ளார்.இவர், 2009ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக சேர்ந்தார். 2011 முதல் 2021 வரை, போர்ச்சுகல், பிரேசில், பூட்டான் நாடுகளில் உள்ள, இந்திய துாதரகங்களில் பணியாற்றினார். கடந்த 2021 ஜூலை 27 முதல், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சென்னை கிண்டி பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர். வெளியுறவு அமைச்சக, சென்னை கிளை செயல கத்தின் முந்தைய தலைவர் வெங்கடாசலம், இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் உள்ள, இந்திய துணை துாதராக நியமிக்கப்பட்டுஉள்ளார். அவர் அங்கு சென்றதைத் தொடர்ந்து, அந்த பொறுப்பில் கோவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை