உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் தொகுதிகள் வேண்டும்; ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்

கூடுதல் தொகுதிகள் வேண்டும்; ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற வகையில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ம.தி.மு.க.,வின் 31வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று(ஜூன் 22) நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளார் துரை வைகோ, ம.தி.மு.க., அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:* தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற வகையில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும்.* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும் உள்ளிட்ட மொத்தம் 28 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ம.தி.மு.க., முன்னாள் எம்.பி., கணேசமூர்த்திக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஈரோட்டில் அவர் வசித்த வீதிக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.பாண்டியாறு மோயாறு இணைப்புத்திட்டம் செயல்படுத்த வேண்டும், காளிங்காராயன் வாய்க்கால் மாசுபாட்டுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உட்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை