உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் 4ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

வரும் 4ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

சென்னை: பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிவிப்பு: முகூர்த்த நாட்களில் அதிக பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என்பதால், பொது மக்கள் கோரிக்கை அடிப்படையில், கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, ஆவணி மாத முகூர்த்த நாளான, செப்., 4ல் சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படும். வழக்கமாக, 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள்; 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 150 டோக்கன்கள் வழங்கப்படும். இதே போல் 'தக்கால்' பிரிவிலும், கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படுயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி