உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும், நாளையும் கூடுதல் டோக்கன் பதிவுத்துறை உத்தரவு

இன்றும், நாளையும் கூடுதல் டோக்கன் பதிவுத்துறை உத்தரவு

சென்னை:ஐப்பசி மாத முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அதிகரிக்கும் என்பதற்காக, இன்றும், நாளையும் கூடுதல் 'டோக்கன்'கள் வழங்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை, வழக்கமான நாட்களை காட்டிலும், முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய, மக்கள் விரும்புகின்றனர். குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழக்கப்படுவது வழக்கம்.இதனால், அந்த நாட்களில் அதிகமானோர் பத்திரங்களை பதிவு செய்ய வழி ஏற்படுகிறது. இதன்படி, ஐப்பசி மாதத்தில், இன்றும், நாளையும் வளர்பிறை முகூர்த்த நாட்களாக வருகின்றன. இதில் பத்திரம் பதிய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, 100 டோக்கன் வழங்கும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்களும், 200 டோக்கன் வழங்கும் அலுவலகங்களில், 300 டோக்கன்களும் வழங்கப்படும். தினசரி 'தத்கல்' பத்திரப்பதிவுக்கு, 12 டோக்கன் வழங்கும் இடங்களில் கூடுதலாக, 4 டோக்கன்கள் வழங்கப்படும் என, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி