உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்

விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 24 மணி நேரம் விசாரணைக்கு பிறகு இன்று அவர் விடுவிக்கப்பட்டார்.திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரான புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதே வழக்கில், ஏ.டி.ஜி.பி., ஜெயராம், கோர்ட்டில் ஆஜரானார். அவர் ஆஜரான சிறிது நேரத்திலேயே நீதிபதி உத்தரவின்பேரில் கோர்ட் வளாகத்திலேயே சீருடையில் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி, விவரங்களை பதிவு செய்தனர். 24 மணி நேரம் போலீஸ் கஸ்டடியில் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், இன்று மாலை அவரை விடுவித்தனர்.ஜெயராம், தன் சொந்த காரில் ஏறி வீட்டுக்கு சென்றார். விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்று அவருக்கு போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர்.குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக டி.ஜி.பி., பரிந்துரை செய்திருந்தார். அதன்படி அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி திருவாலாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Kasimani Baskaran
ஜூன் 17, 2025 17:22

போலிஸ்காரர் கூட சாராக முயற்சிப்பது மகா கேவலம்..


V K
ஜூன் 17, 2025 16:32

காவல்துறை செயல்லை பார்த்து எதிர் கட்சிக்கு பாராட்ட மணயில்லை


GMM
ஜூன் 17, 2025 16:05

காதல் திருமணம். ஏழை பையன், பணக்கார பெண். ஏழை பையனுக்கு ஆதரவு கொடுத்து ஜகசால வித்தை காட்டி கட்சி பங்கு பெறலாம். இதில் ஜெயராம் இரு சாதி / இனத்தையும் சாராதவர். சிறுவனை கடத்த தேவையில்லை. பூவை ஜெகன் கைதிக்கு தகுதியானவர். நீதிபதி புகார் பெற்று, அவசரமாக தீர்வு கண்டு விட்டார். எந்த சூழலிலும் அத்தியாவசிய பணியில் உள்ள அதிகாரியை நீதிபதி கைது செய்ய குறிப்பு கொடுக்க கூடாது. அதன் அடிப்படையில் உள்துறை, முதல்வர் ஒப்புதல் இல்லாமல் செயல் பட கூடாது. காதல் திருமணம் பெற்றோர் சம்மதம் கட்டாயம். மீறி செய்யலாம் என்றால் சொத்து வளர்த்த உறவினர், சமூகத்திற்கு சேரவேண்டும். பெண்ணின் கல்வி, மருத்துவம் போன்ற செலவை திரும்ப பெற இறுதியில் பாதுகாப்பு குறைவதால், பெற்றோருக்கு உரிமை. மடியல் தர போகும் தமிழகம்.


தத்வமசி
ஜூன் 17, 2025 15:30

மானம் கேட்டவர் ஊரில் பெரியவன் என்று ஒரு பழமொழி உண்டு.


V Venkatachalam
ஜூன் 17, 2025 15:17

ரொம்ப கேவலமா இருக்கு. நான் காவல் துறைய பத்தி சொல்லலை.‌ இந்த ஜெயராமன பத்தி சொல்றேன். ஆர்டர் ஆல் 25 லட்சத்துக்கு போய் கைதாயிட்டானே மனுஷன்.ஒரு 1 கோடிக்கு கைதுன்னா பரவாயில்லை. எதுக்கும் ஒரு கவுரவம் வேணுமில்ல. காவல் துறை பத்தி யாரும் தப்பா பேசக்கூடாது.


சிவம்
ஜூன் 17, 2025 13:34

புரட்சி பாரதம் கட்சி திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சி. அதன் MLA தவறு செய்ததற்கு ஒட்டு மொத்த திமுகவின் மேல் பழி சுமத்துவது சரியல்ல. அதே போல் ஆளும் கட்சி சார்பில் உள்ள ஒரு MLA கொடுத்த பணியை காவல் துறை அதிகாரி எப்படி தட்ட முடியும். MLA ஒரு மக்கள் பிரதிநிதி. இந்த குறிப்பிட்ட அதிகாரி சட்டத்துக்கு புறம்பாக செய்தாரா இல்லையா என்பது பின்பு விசாரணையில் தெரிய வரும். அதற்காக மொத்த காவல் அதிகாரிகளையும் குறை சொல்வது சரியல்ல. அவர்களை சட்ட விதிகள் படி நடக்க விட்டு பாருங்கள். பின்பு தெரியும் அவர்கள் திறமை.


Manaimaran
ஜூன் 17, 2025 13:20

M.L.A.வையும் தகுதிநீக்கம் செய்ய உத்தரவு போட முடியாதா?


Ahamed Fazal
ஜூன் 17, 2025 13:18

போலீஸ் உங்கள் நண்பன், தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் கடத்துவோம்


Ramesh Sargam
ஜூன் 17, 2025 13:17

கைது செய்யப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி இப்ப திமுக கட்சியில் சேர்ந்துவிட்டால், அவர் சம்பந்தப்பட்ட வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்குமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 17, 2025 13:16

எந்தக்கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி ..........


முக்கிய வீடியோ