உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி.க.,வில் இருந்து வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா

வி.சி.க.,வில் இருந்து வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சுகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் பேச்சு விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., இடையே பெரும் உரசலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் முன்னணி நிர்வாகிகள் இடையேயும் கருத்து முரண்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=04n8l9gs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் பிறகு, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது தொடர்பாகவும், புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது குறித்தும் ஆதவ் அர்ஜூனா 'டிவி'க்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.இது தொடர்பாக திருமாவளவன் திருச்சியில் அளித்த பேட்டியில், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது. ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வதே தவறு. அப்படி சொல்லக்கூடாது.அவர் மீண்டும் கட்சியில் இயங்க வேண்டுமென நினைத்து இருந்தால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்திருப்பார் எனக்கூறியிருந்தார்.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர், திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.அக்கடிதத்தில் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளதாவது: விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Kasimani Baskaran
டிச 16, 2024 04:55

கட்சி ஓனரை நீக்கிவிட்டால் கூட சிறுபான்மையினர் ஓட்டு தீம்க்காவுக்குத்தான்.


T.sthivinayagam
டிச 15, 2024 23:56

அமலாக்க துறை சூஷ்மம் தெரிந்தவர்


வைகுண்டேஸ்வரன் V
டிச 15, 2024 22:33

இதை வெச்சு ஒரு வாரம் ஓட்டுவார்கள். அடுத்து த வெ க வில் சேருவார். அதை வெச்சு இன்னொரு வாரம் ஓட்டலாம். எப்படியாச்சும் மீடியா வெளிச்சத்தில் இருக்கணும்.


N Sasikumar Yadhav
டிச 15, 2024 21:38

அடுத்த கட்சிகளுக்கு கொத்தடிமையாகவே இருந்து பழக்கப்பட்ட விடுதலை சிருத்தைகளுக்கு நிமிர்ந்து நிற்க பிடிக்காது


Dhanraj
டிச 15, 2024 21:24

அழுத்தத்திற்கு அடி பணிந்துவிட்டார் திருமா. விலகும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து விட்டார்


Dhanraj
டிச 15, 2024 21:21

கட்சியை வளரவிடாமல் தடுப்பதற்கு சிலர் கட்சிக்குள் இருப்பார்கள் - 26 தேர்தலில் எம்எல்ஏ ஆகிவிடலாம் என்ற கனவில் இருக்கும் சில சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு திருமா பலியாகிவிட்டார்.


Dhanraj
டிச 15, 2024 21:18

ஒருவரை தலைவராக ஏற்று, தலித்துகள் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த ஒருவரை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தினால் அவர் என்ன செய்வார்....?


Dhanraj
டிச 15, 2024 21:17

கலைஞர் கருணாநிதி கூட இப்படி யாரையும் கூட்டணிக்குள் கட்டிப் போடவில்லை. மக்கள் இல்லாமல் இந்த கூட்டணிக்கு சக்தி எது....?


Dhanraj
டிச 15, 2024 21:15

தலைவர்களை உருவாக்குவது தலைவனுக்கு அழகு. ஒரு தலைவன் தானே உருவாக்கி இருக்கிறான்.


Dhanraj
டிச 15, 2024 21:14

திருமா தன்னுடைய தன்மானத்தை இழந்து ஆதவ் அர்ஜுனாவின் தன்மானத்தை சீண்டி பார்க்கிறார். திருமா கொஞ்சம் அமைதி காத்திருக்கலாம்.


புதிய வீடியோ