உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

அ.தி.மு.க., பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நாளை காஞ்சிபுரத்தில் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம், கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., 53ம் ஆண்டுதுவக்கவிழாவையொட்டி, நாளை காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. இதில், பழனிசாமி பங்கேற்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக, நாளை காஞ்சிபுரத்தில்நடக்க இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !