உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைகோ மருத்துவமனையில் அனுமதி

வைகோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, 80, வயது மூப்பின் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார். கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகன் துரை வைகோவிடம் கொடுத்து விட்டு, ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும், அவ்வப்போது, அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில், வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது, வைக்கப்பட்ட பிளேட்டை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சுலைமான்
நவ 14, 2024 19:16

விரைவில் நல்ல செய்தியை எதிர்நோக்கி......


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 14, 2024 14:11

கழகத்தொண்டனாக இருந்துகொண்டு காவேரி மருத்துவ மனைக்கு போகாமல் வேறு மருத்துவ மனையை நாடினால் அது கட்சிக்கு இழைத்த துரோகம் இல்லையா?


R K Raman
நவ 14, 2024 14:02

எப்படியோ இருக்க வேண்டியவர் இவ்வளவு கேவலமாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது


SUBRAMANIAN P
நவ 14, 2024 13:44

ஏன் துரைக்கு கொடுக்கவேண்டும், அவர் கட்சியில் தகுதியானவர் யாரும் இல்லையா.. சூடு சுரணை இல்லாத மரத்துப்போனவர்கள் கட்சித்தொண்டர்கள்.


sankar
நவ 14, 2024 12:05

கட்சி திமுகவுக்கு அடிமை சாசனம் கொடுக்கப்பட்டு - கிளைக்கழகம் - நிலைய வித்வான் போல - ஒரு இழிவான நிலையில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை