உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,விற்கு சரிவு துவங்கி விட்டது

தி.மு.க.,விற்கு சரிவு துவங்கி விட்டது

திருநெல்வேலி : ''தி.மு.க., கூட்டணி கட்சியினர் அரசு செயல்பாடு குறித்து கேள்வி கேட்க துவங்கி விட்டனர். அக்கட்சிக்கு சரிவு துவங்கி விட்டது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா நடந்தது. மாவட்ட செயலர் இசக்கி சுப்பையா தலைமை வகித்தார். கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:அ.தி.மு.க.,வை துவக்கிய போது எம்.ஜி.ஆர். எத்தனை சோதனைகளை சந்தித்தாரோ, அதேபோல சோதனைகளை ஜெயலலிதாவும் சந்தித்தார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு இல்லை. அவர் மீது புத்தகத்தை வீசி எறிந்தனர். தலைமுடியை பிடித்து இழுத்தனர். எம்.ஜி.ஆர்., காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், தற்போதும் நாம் போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறோம்.சட்டசபையில் என் மேஜை மீதும், கடம்பூர் ராஜு மேஜை மீதும் ஏறி தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் டான்ஸ் ஆடுகின்றனர். ஸ்டாலின் குடும்பத்திற்குள் சிக்கி தி.மு.க., சின்னா பின்னமாகி வருகிறது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க தி.மு.க.,வுடன் இணைந்து சிலர் ஓட்டளித்தனர். அவர்கள் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அ.தி.மு.க., இப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. பிளவு ஏதும் இல்லை. கருணாநிதியாலேயே அ.தி.மு.க.,வை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க., குடும்பத்தில் இருந்து உதயநிதி துணை முதல்வர் ஆகியுள்ளார். அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும் பதவிக்கு வர முடியும். அதற்கு நானே சான்று.மதுரையில் நடந்த அ.தி.மு.க., பொன்விழா மாநாட்டிற்கு, 15 லட்சம் பேர் வந்தனர். ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் கூட்டம் முடிந்து போகும்போது, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் உரிமையாளரின் மூக்கை உடைக்கின்றனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., 19.30 சதவீதம் ஓட்டு மட்டுமே பெற்றது. 2024 தேர்தலில் பெரிய கூட்டணி எதுவும் இல்லாமல், 2.50 சதவீதம் ஓட்டு கூடுதலாக கிடைத்தது. தி.மு.க., 2019ல், 33.92 சதவீதம் ஓட்டு பெற்றது. 2024ல், 26.52 சதவீதம் ஓட்டு மட்டுமே பெற்றுள்ளது. 7 சதவீத ஓட்டு குறைந்துள்ளது.இதுவரை தி.மு.க.,வின் குறைகளை சுட்டிக் காட்டாத கூட்டணி கட்சியினர், தற்போது அரசின் செயல்பாடுகளை, குறைகளை சுட்டிக் காட்ட துவங்கி விட்டனர். தி.மு.க.,வுக்கு சரிவு ஏற்பட துவங்கிவிட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்து 40 மாதங்களில் எந்த பெரிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. 3 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mohan
அக் 21, 2024 13:50

ஐயா எடப்பாடியாரே உங்களுக்கே நல்லா தெரியும், லோக்சபா தேர்தலில் உங்களால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. அதை விட, நான்கைந்து இடங்களில் ""டெபாசிட்"" கூட இழந்து தடுமாறி குழியில் விழுந்துள்ள அதிமுக எப்படி திமுக வைப்பற்றி பேச வாய்வருகிறதோ? ஐயா நீங்க ஒன்னும் அம்மா நியமித்த வாரிசு அல்ல, எம் ஜி ஆர் மாதிரி மக்கள் செல்வாக்கு உள்ளவரோ அல்லது திமுக ஸ்டாலின் மாதிரி குடும்ப அரசியல் செல்வாக்கு பின்புலத்தில் உள்ளவரோ அல்ல. அப்படி இருக்கையில் மலை போன்ற பாஜக வின் ஆதரவை உதறித்தள்ளி தமிழ் நாட்டு அரசியலில் தோல்வி மேல் தோல்வி அடைந்த பின்பும் சுதாரிக்காமல் வெட்டி வீரம் பேசுவது அறிவிலித்தனம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. 2026 தேர்தலில் ஜெயிக்க மக்களிடம் நம்பிக்கை பெற வேண்டும். அதற்கு யார்உதவுவார்கள் என்பதை கணிக்க வேண்டும். உங்க கொங்கு ஆதரவாளர்கள் மட்டும் சத்தியமாக போதாது. பாஜக விடம் நட்பை புதுப்பிக்கவும். அதன் தேசிய தலைமையை கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் திமுகவுக்கு உங்களிடம் பயம் வரும். காரியங்கள் நடக்கும். உங்கள் எதிர்ப்புக்கு பயந்து திமுக தன் வேகத்தை குறைக்கும்.


Easwar Moorthy
அக் 21, 2024 11:52

அது சரி தான் ஆனால் அதிமுக ஏற்கனவே பாதாள குழியில் தானே உள்ளது


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 11:04

"..ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற.." - என்றால் என்ன? raja என்கிற ஐ டி அடிக்கடி ஒன் கொள் என்று எழுதுகிறது. என்னன்னே புரியல.


raja
அக் 21, 2024 15:54

அட உடன் பிறப்பே திருட்டு இரயில் ஏறி வந்த நம்ப தலைவர் கட்டுமர குடும்பம் தான்.. நீ என்ன புது அப்ரசண்டியா...


Barakat Ali
அக் 21, 2024 10:47

துக்ளக்காரின் இனிய ஆனால் ரகசிய நண்பர் ........


Shekar
அக் 21, 2024 10:13

திமுக சரிவு துவங்கியது உண்மைதான், ஆனால் நீங்க சரிஞ்ச சரிவுல புதைந்து போயிட்டிங்களே.


T. S. SRIRAMAN
அக் 21, 2024 10:13

எடப்பாடி அவர்கள் எப்படி சொல்கிறார் .


Kabilan
அக் 21, 2024 10:10

ஏதோ வயித்தெரிச்சல்ல சொல்ற மாதிரில இருக்கு ... நாங்க எப்பவோ சரிஞ்சிட்டோம் ஆனா தி.மு.க இப்பதான் சரிய தொடங்கிருக்கு


சம்பா
அக் 21, 2024 07:53

பணத்தால் சரி கட்ட படும் உங்க எண்ணம் பலிக்காது அடுத்த முறை ஆட்சி அமய ஒன்று முழுவதுமா ஒரு ரே கட்டத்துல மது கடை முடல் இரண் கூட்டனி ஆட்சி உண்டு இத சொல்லி பாருங்க வெற்றிதான்


raja
அக் 21, 2024 07:12

நமக்கு தெரிந்து சுமார் ஒரு 35000 கோடி கொள்ளை அடித்த, சமாதானம் என்கிற இந்து மதத்தை ஒழிப்போம் என்று கூறிய மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிய, சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி மின்சார கட்டணம் காய்கறி விலை யில் இருந்து கட்டிட பொருள்கள் வரை விலைகளை ஏற்றி கொள்ளை அடித்த வாரிசு அரசியல் நடத்தும் இந்து விரோத, தேசவிரோதிகளின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய, கஞ்சா கள்ள சாராயம், போதை பொருட்கள் கடத்தி விற்கும் கேந்திரமாக தமிழகத்தை மாற்றிய இந்த கேடுகெட்ட திருட்டு திராவிட திமுக அரசையும் அதை வழிநடத்தும் ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பத்தையும் தமிழகத்தை விட்டு அடித்து விரட்ட தமிழர்கள் முடிவெடுத்து விட்டார்கள்...


Farmer
அக் 21, 2024 06:26

கைப்புள்ள கெளம்பிட்டான்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை