உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்: தேவையற்றது என தி.மு.க., கண்டனம்

அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்: தேவையற்றது என தி.மு.க., கண்டனம்

சென்னை : சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் நேற்று, அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடத்தப்பட்டது. மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி வார்டுகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.அ.தி.மு.க., போராட்டம் குறித்து, அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: அ.தி.மு.க ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதை பழனிசாமி மறந்து விட்டார். 2018ல், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு,50 முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தினர். கடந்த 2019ல் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்தபோது, அதற்கு சம்மதம் தெரிவித்தது அ.தி.மு.க., அரசுதான்.உட்கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி சண்டையை மறைக்க, இப்படி ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார் பழனிசாமி. மக்களை திசை திருப்புவதற்காக செய்யும் பொய்யான போராட்டங்களை, பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Lion Drsekar
அக் 09, 2024 19:55

அவர்கள் செய்தார்கள் ஆட்சிக்கு வந்தார்கள் மீண்டும் வரப்போகிறார்கள் காக்கை வலிப்பு என்று கூறுவார்கள் நரம்பு தளர்ச்சி நோய்க்கு அதுபோல் எந்த சங்கிலியும் இனி வேலைக்கு ஆகாது , வந்தே மாதரம்


ஆரூர் ரங்
அக் 09, 2024 14:38

மத்திய அரசு கூறியதால் திமுக அரசு வரியை ஏற்றியதாம் . அப்போ மத்திய அரசு சொன்னா நீட்டையும்..?


Kadaparai Mani
அக் 09, 2024 11:19

இன்றும் மதுரை நகரில் மாபெரும் போராட்டம் அதிமுக நடத்துகிறது


mindum vasantham
அக் 09, 2024 09:58

தளபதி விஜய் கட்சிக்கு கூட்டம் எகிறுத்தாமே


வாய்மையே வெல்லும்
அக் 09, 2024 09:03

இங்க வந்து கம்புசுத்துற கருப்பு ஆடுகளுக்கு , நாம கலாய்க்கிறது சுத்தமாக பிடிக்கவில்லை. திருடனுக்கு தேள்கொட்டினாலும் கத்த முடியாத பரிதாபநிலை தான் இருநூறு ருபாய் அல்லக்கை அனுதாபிகள் கூற்று


Rajarajan
அக் 09, 2024 08:41

எதிர்க்கட்சி ஆனா, நீங்களும் இதையே தான் நாளைக்கு செய்வீங்க. அது இருக்கட்டும். நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடினால், அரசுக்கு பல லட்சம் கோடி லாபம். இதை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். எங்கே, எந்த கட்சியாவது இதை செயல்படுத்த சொல்லுங்க பாப்போம். அட, ஒரு பேச்சுக்காச்சும் சொல்ல சொல்லுங்க பாப்போம். கையில் வெண்ணை இருக்க, நெய்க்கு அலைவானேன். வரிகட்டுவது திருவாளர் பொதுஜனம் தானே. அரசியல்வாதிக்கு / கட்சிக்கு / ஆட்சிக்கு என்ன கஷ்டம்.


Rajarajan
அக் 09, 2024 08:35

எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல், அவியலா செய்யும் ? எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா ?? உங்க எதிரொலி தான் தலைவரே.


raja
அக் 09, 2024 08:15

கேடுகெட்ட இழி பிறவி ஒன்கொள் தெலுங்கு கோவால் புற விடியல் ... தேவை இல்லாத ஆணிகளுக்கு இந்த எதிர்ப்பு தேவையானது தான் மனுகுநிகளே...


வாய்மையே வெல்லும்
அக் 09, 2024 07:06

தீயமூர்க்கன் வாய்க்கு வந்தபடி கையாலாகாத சொத்து வரியை போடுவான் . இவனை கேட்கக்கூடாது .. முதலில் இந்த ஆட்சியை கவிழ்க்கவேணும் அடுத்த தேர்தலில் வரவேகூடாது சுத்த வேஸ்ட் ஆட்சி .


ramani
அக் 09, 2024 06:37

அதே நீங்க செய்தால் சரி எதிர்கட்காரன் செய்தால் தவறு.என்ன உங்க நியாயம்? இது ஓவரா தெரியவில்லை