மேலும் செய்திகள்
இளம் பெண் மாயம்
29-Oct-2024
திருவாரூர்: திருவாரூர், கே.டி.ஆர்., எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன், 70. இவரது மகன் பாலாஜி, 42; திருவாருர் நகராட்சி, 27வது வார்டு அ.தி.மு.க., செயலர். இவரது மனைவி மீனாட்சி, 35. இவர், தன் மகளிடம், ரெங்கநாதன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, கடந்த ஆண்டு, திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் உள்ளது. இது தொடர்பாக, பாலாஜி ---- மீனாட்சி இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், மீனாட்சியிடம், தந்தை மீது கொடுத்த போக்சோ வழக்கை வாபஸ் வாங்கும்படி, நாட்டு கைத்துப்பாக்கியை காட்டி, மீனாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.திருவாரூர் நகர போலீசில் மீனாட்சி புகார் அளித்தார். கணவரின் நாட்டு கைத்துப்பாக்கியையும் பறித்து, போலீசில் ஒப்படைத்தார். பாலாஜியிடம் விசாரித்ததில், நாட்டு கைத்துப்பாக்கியை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர், 46, என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்தார். போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
29-Oct-2024