உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., மாஜி அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகவும், தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகளை குவித்ததாகவும் புகார்கள் எழுந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=re91gllr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் தற்போது ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். இந் நிலையில், சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேவூர் ராமச்சந்திரன் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. எதற்காக இந்த சோதனை, ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா என்பது குறித்த விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anbuselvan
மே 17, 2025 12:33

நீங்க ED அக்னி ஏவுகணை விட்டால் நாங்கள் லஞ்ச ஒழிப்பு துறை ஷாஹீன் ஏவுகணையை விடுவோம்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 17, 2025 11:28

அமலாக்க துறை டாஸ்மாக் ஊழல் குறித்த விசாரணை வேகப்படுத்தியது ஆதலால் செய்திகளில் முதன்மையாக வருவதால் அதை மடைமாற்ற இந்த லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு.....இப்பொழுது தமிழக செய்தி ஊடகங்களில் இது தான் முதன்மை செய்தியாக முன்னெடுக்கப்படும்.... டாஸ்மாக் ரெய்டுகள் பின்னுக்கு தள்ளப்படும்.... மேட்டர் ஓவர்....!!!


Kasimani Baskaran
மே 17, 2025 09:53

கூட்டணிக்கட்சிக்கே ரைடா... ஹீ ஹீ சிபிஐ தானாகவே செயல்படுகிறது.


M S RAGHUNATHAN
மே 17, 2025 09:46

லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள்.அமைச்சரிடம் முன் அனுமதி பெற்று " raid" நடத்தியதா அல்லது Surprise raid நடத்தியதா ? இவர் இப்போது MLA. ஆகவே சபாநாயகர் இடம் அனுமதி பெற்றதா லஞ்ச ஒழிப்பு துறை. திமுக அரசு பதில் சொல்ல வேண்டும்


Haja Kuthubdeen
மே 17, 2025 09:10

ஏதாவது செஞ்சாகனுமே..ஏகப்பட்ட சார் கள் லைனில் வெயிட் பண்ணிட்டு இருக்காங்களே...


baala
மே 17, 2025 09:08

கண் துடைப்பு


சமீபத்திய செய்தி