உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திராவில் சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார்: நடிகர் விஜய்க்கு எஸ்பி வேலுமணி பதில்

ஆந்திராவில் சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார்: நடிகர் விஜய்க்கு எஸ்பி வேலுமணி பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குன்னத்தூர்: 'ஆந்திராவில் மிக பெரும் கூட்டத்தை கூட்டி கட்சி ஆரம்பித்த நடிகர் சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார். ஆனால் இபிஎஸ் யார் என்றே தெரியாது என்ற நடிகர் விஜய் அரசியலில் என்ன செய்து விட முடியும்' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்து உள்ளார். மதுரையில் செப்.1ம் தேதி இபிஎஸ் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக குன்னத்தூரில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது; திமுக ஒரு முறை ஆட்சி அமைத்தால் மறுமுறை ஆட்சிக்கு வரமுடியாது. இந்த வரலாறு 2026ம் ஆண்டும் தொடரும். நிறைய நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துள்ளனர். இப்போது கூட நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். மதுரையில் அவர் பேசியதை எல்லாம் கேட்டு இருப்பீர்கள்.யாரையும் நாங்கள் எப்போதும் குறை சொல்லி பேசமாட்டோம். அவரின் (நடிகர் விஜய்) படத்தை பார்த்து நாங்களும் ரசிக்கக்கூடியவர்கள் தான். ஆனால் அந்த மாநாட்டில் (தவெக மதுரை மாநாடு) அதிமுகவுக்கு இருக்கும் தலைவரை பார்த்தீர்களா? என்பது மாதிரி வார்த்தை வந்துவிட்டது.எங்களுடைய தலைவர் இப்போது யார்? இபிஎஸ் தான். அவரை பார்த்து அதிமுகவுக்கு யார் தலைவர் என்றே தெரியாது என்று சொன்னால்... இதுக்கு மேல் யாராவது இருக்க முடியுமா? இப்படி எல்லாம் ஒருத்தர் (நடிகர் விஜய்) அரசியலுக்கு வந்து அவர் என்ன பண்ண முடியும்? யார் வேண்டுமானாலும் அவரை (இபிஎஸ்) போய் பார்க்கலாம். அப்படிப்பட்ட தலைவர். ஆனால் நான் சிங்கம் எப்போதாவது ஒரு தடவை தான் வெளியே வருவேன் என்று நமது தலைவரை பற்றி பேசுகிறார்.எங்கள் தலைவரை பற்றி பேசக்கூடிய உரிமை யாருக்கும் இல்லை. அப்படிப்பட்டவரை பார்த்து இன்றைக்கு ஒரு நடிகர் இப்படி பேசுகிறார். இதை விட பெரிய கூட்டத்தை எல்லாம் பார்த்தீர்கள் என்றால்.. நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் கூட்டத்தை பாருங்கள். இப்போது கட்சியே இல்லாமல் கலைத்து விட்டு போய்விட்டனர்.சாதாரண கட்சிக்கு தலைவராக இபிஎஸ் இல்லை. 53 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி. 2026ல் இபிஎஸ் தான் முதல்வர் என்பது உறுதி. விஜய் மட்டுமல்ல, யாரும் இதை தடுக்க முடியாது. இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ayyasamy
ஆக 26, 2025 18:16

விஜய் எதிர்காலத்தில் தனது அரசியல் கட்சியை மூடலாம் அல்லது வேறு எந்த முன்னணி கட்சியுடனும் இணையலாம். நிச்சயமாக அவர் தொடர்ந்து நடித்து தனது படத்திலிருந்து 1000 கோடி சம்பாதிக்கலாம்.


Tamilan
ஆக 26, 2025 17:47

ஆந்திராவில் பவான் கல்யாணே வரவில்லையா


joe
ஆக 26, 2025 17:06

வேலுமணி அய்யா அவர்களுக்கு இப்போது உங்களின் அ தி மு க எனும் கட்சியே காற்று போன பையாகவே இருப்பது என்பது உங்களுக்கு தெரியாதா ?அந்த வேலையை பாருய்யா .சும்மா மெண்டல் மாதிரி என்ன நடக்குது என்று தெரியாமல் உளறிக்கொட்டாதே .புரியுதா .உடைந்துபோன உன் கட்சி இனி சேராதுய்யா .அதை முதல்ல புரிந்து கொள் .அங்கெ போய் தலையை காட்டு .இங்கே மூக்கை நுழைக்காதே .சரியா.புரிந்ததா ம் ...அங்கே போய் ஆக வேண்டியதை பாருய்யா.


Raja k
ஆக 26, 2025 15:35

நீங்க டேரா போட்டு இருக்கற கட்சியை ஆரம்பித்தவரும் நடிகர்தான், உங்க கட்சியை வழிநடத்தியவரும் நடிகைதான், அவர்கள் எல்லாம் கட்சியை அவர்களோடு கலைத்துவிட்டு போயிருந்தால், நீங்கள் எல்லாம் இப்படி பல்லாயிரம் கோடி களுக்கு அதிபதி ஆயிருக்க முடியுமா, இல்லை கோவையில் தனி சாம்ரான்யம்தா நடத்த முடியுமா?


VSMani
ஆக 26, 2025 14:42

ஆந்திராவில் சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார் உண்மைதான். தமிழ்நாட்டில் MGR, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் கட்சியை கலைத்துவிட்டனரா? MGR ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை MGR ஜெயலலிதாவுக்குப்பிடிக்காத பிஜேபி யுடன் கூட்டணிவைத்து அதிமுக கட்சியை படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டவரர்களை என்ன ஆள்வது?


Thravisham
ஆக 26, 2025 16:39

நீங்க குண்டர் முன்னேற்ற கழகம் 200ரூவாவா?


G Mahalingam
ஆக 26, 2025 13:02

திமுக இறக்குமதி செய்தவர் தான் விஜய். அடிப்பது போல அடிக்கிறேன் அழுவது போல் அழு. வோட்டை பிரித்து திமுக ஆட்சிக்கு வருவதற்கு விஜய் உதவுகிறார். அதற்கு 10 சாக்கு பைகள் கிடைத்து இருக்கும்.


google
ஆக 26, 2025 12:32

அதிமுக முடிவுக்கு வந்து விட்டது. மற்றவர்களை பற்றி கவலை படாமல் உன் கட்சியை காப்பாற்று.


Kadaparai Mani
ஆக 26, 2025 13:58

EPS gathering crowds like MGR. AIADMk will sweep polls and EPS next CM


M Ramachandran
ஆக 26, 2025 12:32

கள்ள பணம் சேர்ந்தால் நிலை கொள்ளாது. இதெற்கென்றே சிலர் சொந்த லாபத்திற்கு தூபம் போட்டு அரசியல் சூதாட்டத்தில் தங்க சுய நலத்திர்ற்கு இறக்கி விட்டு அவர்கள் வளத்தை பெருக்கி கொண்டு காணமல் போய் விடுவார்கள். முன்பு அப்படி செய்த்தவர்களின் நிலையை கண்டு அப்படியும் அரசியல் ஆட்டத்தில் இறங்கினால் வருவதை எதிர் கொள். அப்புறம் என்ன ஆழம் தெரியாமலும் சுய புத்தி இல்லாதவனும் குழியில் மாட்டி காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் போய் சேர வேண்டிய இடத்திற்கு கடைசி ஜபம் செய்து செல்ல வேண்டியது தான். விதி வலியது.


திகழ்ஓவியன்
ஆக 26, 2025 12:28

எல்லாம் சரி, இதனால் எம்எல்ஏ சீட்டுகள் கிடைக்குமா? இல்லையெனில் மற்றொரு சீமான் தான் விஜய். 2006 தேர்தலில் விஜயகாந்த் தனியாகத்தான் நின்றார் 8.4% வாக்குகள் வாங்கினார். ஆனால் ஒரே ஒரு எம்எல்ஏ சீட் மட்டுமே கிடைத்தது. அதே சமயம், 2011 தேர்தலில் அதிமுக என்ற வலுவான கூட்டணியில் நின்று 29 எம்எல்ஏ சீட்களை வென்றெடுத்தார். இத்தனைக்கும் முந்தைய தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைவுதான் 7.9%. விஜயின் அரசியல் சாணக்கியர்கள் இந்த கணக்கை எல்லாம் விஜய்க்கு எடுத்து சொன்னார்களா தெரியவில்லை


திகழ்ஓவியன்
ஆக 26, 2025 12:27

TVK | விஜயை கொஞ்சமாவது வளர்த்துவிட வேண்டும்.. DMK ஆடும் கேம்' VIJAY அதிக வோட்டு வாங்கணும் அப்ப தான் DMK சாதகம், விஜய் குறைத்து வாங்கினால் அது DMK கூட்டணிக்கு கொஞ்சம் சிரமம் கொடுக்கும் ஆகவே விஜய வளர்த்து விடுவது DMK தான் , அதனால் தான் DMK வில் இருந்து பெரிய எதிர்ப்பு அவருக்கு எதிரா பேசவில்லை


சமீபத்திய செய்தி