உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 52 ஆண்டுகளுக்கு பின் தென்பெண்ணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுப்பு

52 ஆண்டுகளுக்கு பின் தென்பெண்ணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுப்பு

திருக்கோவிலூர்: பெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால், தென்பெண்ணையில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2 லட்சம் கன அடிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.பெஞ்சல் புயல் காரணமாக, தென்பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விடாது பெய்த அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாத்தனூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது.நீர் திறப்பு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வினாடிக்கு 1.68 லட்ச கன அடியாக உயர்த்தப்பட்டது.திருவண்ணாமலை மற்றும் தென்பெண்ணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் மற்றும் துரிஞ்சலாற்று நீரும் சேர்ந்து திருக்கோவிலூர் அணைக்கட்டில் 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக வெள்ளம் பாய்ந்தோடியது.1972ம் ஆண்டு தென்பெண்ணையில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வாய்மையே வெல்லும்
டிச 03, 2024 08:54

ஹையா அடுத்தவருடம் மணல் அள்ள அணில் சகாக்கள் ரெடி ன்னு சொல்லு பெங்கால் புயல். அணில்குஞ்சுக்கு வந்த அதிஷ்டத்தை பாறேன் எல்லாம் நமது தமிழக மக்களின் தலையெழுத்து. எங்கும் எதிலும் திருட்டு புத்தி .திருந்தாத திராவிட மண்ணாங்கட்டி அரசியல்


Indian
டிச 03, 2024 08:43

எல்லாத்தையும் கடல்ல விட்டுருங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை