உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உழவரை தேடி வேளாண்மை திட்டம் முடக்கம்? உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு அதிகாரிகள் செல்வதால் அதிருப்தி

உழவரை தேடி வேளாண்மை திட்டம் முடக்கம்? உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு அதிகாரிகள் செல்வதால் அதிருப்தி

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் துவக்கப்பட்டு உள்ளதால், 'உழவரை தேடி வேளாண்மை' திட்டம் துவங்கிய வேகத்திலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 1.47 கோடி ஏக்கரில் பலவகை பயிர் சாகுபடி நடந்து வருகிறது. மாநிலம் முழுதும், 79.3 லட்சம் விவசாயிகள் சொந்தமாக நிலம் வைத்து, சாகுபடி செய்து வருகின்றனர். இதில், 93 சதவீதம் பேர் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள்.

தனி பட்ஜெட்

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சாகுபடி உதவிகள், வேளாண் கருவிகளை பெற்று, இவர்கள் ஆர்வமுடன் சாகுபடி செய்கின்றனர். தி.மு.க., அரசு, 2021ம் ஆண்டு பொறுப்பேற்றபின், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மானிய உதவிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இது குறித்த விபரம் தெரியாததால், இத்திட்டங்களில் பலன் அடைந்தவர்களே, மீண்டும் மீண்டும் பலன் அடைந்து வருகின்றனர். இதனால், சாகுபடி பரப்பை திட்டமிட்டபடி அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில், உழவரை தேடி வேளாண்மை என்ற திட்டத்தை, வேளாண் துறை நடப்பாண்டு முதல் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தை, மே 29ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன்படி, வேளாண் துறையை சேர்ந்த பல்வேறு பிரிவினரும், மாதம் இரண்டு முறை வருவாய் கிராமம் வாரியாக சென்று, முகாம் அமைத்து, விவசாயிகளை சந்திக்க வேண்டும். விவசாயம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி, பயிர் சார்ந்த நவீன தொழிற்நுட்பங்கள் குறித்து விளக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு தொழிலில் உள்ள பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். சாகுபடி தொடர்பான மானிய உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுதும் உள்ள, 17,116 வருவாய் கிராமங்களில், இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதான காரணம்

இந்நிலையில், இந்த திட்டத்தை போன்றே, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை, அரசு துவக்கியுள்ளது. இதனால், உழவரை தேடி வேளாண்மை திட்டம் துவங்கிய வேகத்திலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு, வேளாண்மை அதிகாரிகள், அலுவலர்கள் சென்று விடுவதே, இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். குவிந்தன 12.6 லட்சம் மனுக்கள் அரசு துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை, கடலுார் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில், கடந்த 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். நகர்ப்புறங்களில், 13 அரசு துறைகளின் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில், 15 அரசு துறைகளின் 46 சேவைகளும், இந்த முகாம்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. இங்கு பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இதனால், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், பொது மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதுவரை, 12.60 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Suppan
ஜூலை 30, 2025 16:19

இன்னும் இதே மாதிரி ஒரு இருபது திட்டங்களை அறிவித்து தேர்தலில் மார் தட்டிக்கொள்ளலாம். தொடக்க விழாக்களை எல்லா பத்திரிக்கைகளிலும் அரசு செலவில் விளம்பரம் செய்யலாம். நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டதா, எவ்வளவு பேர் பலனடைந்தார்கள் என்பதைப்பற்றிக் கவலையில்லை. நாலு அல்லக்கைகளை விட்டு வீடியோ எடுத்து விளம்பரம் செய்யலாம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 30, 2025 13:56

12.6 லட்சம் மனு என்றால் எவ்வளவு கிலோ தேறும்? எத்தனை டன் பேரீச்சம் பழம் கிடைக்கும்? தமிழக புள்ளிவிவரத்துறை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.


vivek
ஜூலை 30, 2025 09:05

ஹையோ ஹையோ.....இன்னுமா இதுகளை நம்பிறீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை