உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., -- பா.ஜ., வை தனிமைப்படுத்த தி.மு.க., திட்டம்

அ.தி.மு.க., -- பா.ஜ., வை தனிமைப்படுத்த தி.மு.க., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வேறு கட்சிகள் இணையாமல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை தனிமைப்படுத்த, தி.மு.க., வியூகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகிஉள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை துவங்கியுள்ள முக்கிய அரசியல் கட்சிகள், கூட்டணி தொடர்பாக திரைமறைவில் பேச்சுகளை நடத்தி வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=myjrwuez&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் தி.மு.க., உறுதியாக உள்ளது. 2019ல் அமைந்த தி.மு.க., கூட்டணி சிதறாமல் அப்படியே இருந்தாலும், தி.மு.க.,வின் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியில், சிறு சேதாரத்தையாவது விஜய் ஏற்படுத்துவார் என்ற அச்சம் தி.மு.க.,வினரிடம் உள்ளது. இச்சூழலில், அ.தி.மு.க., வலுவான கூட்டணியை அமைத்து விட்டால், ஆட்சியை இழக்க நேரிடும் என்ற அச்சம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 11ல் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க., கூட்டணியில், மூன்றரை மாதங்கள் கடந்தும், வேறு கட்சிகள் இன்று வரை இணையவில்லை. கடந்த ஏப்ரல் 11ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோதே, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைய இருப்பதாக கூறப்பட்டது; ஆனால், அது நடக்கவில்லை. இதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதாக கூறப்படுகிறது. ராமதாஸ் -- அன்புமணி மோதல் முடிவுக்கு வராததால், பா.ம.க., இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., பதவி தராததால், தே.மு.தி.க.,வும் பழனிசாமி மீது கோபத்தில் உள்ளது. த.வெ.க., அல்லது நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மெகா கூட்டணி அமைப்போம்' என கூறி வருகிறார். அவரின் இந்த முயற்சியை முறியடிக்க, பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள கட்சிகளை, தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பது அல்லது த.வெ.க., கூட்டணிக்கு அனுப்பி விடுவது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை, தி.மு.க., வகுத்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க, பா.ஜ., எவ்வளவோ முயற்சித்தும் பழனிசாமி மறுத்து வருகிறார். 'இதனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அ.தி.மு.க., கூட்டணி இழப்பை சந்திக்கும். பா.ம.க., இல்லாவிட்டால் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றியும் கிடைக்காது. 'வேறு கட்சிகள் இணையாமல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை தனிமைப்படுத்தும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

V K
ஜூலை 31, 2025 21:23

ரெண்டு நாளைக்கு நியூஸ் இப்படி தான் இருக்கும் பிறகு பன்னிர் செல்வம்னு ஒருத்தர் இருந்தார் –னு சொல்வாங்க.சும்மா கிடந்த பொம்மைக்கு சாவி கொடுத்தா ரெண்டு நாளைக்கு சவுண்ட் வர்ற மாதிரி


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 19:42

நல்லாட்சி தந்திருந்தால் திமுக வுக்கு கூட்டணியே தேவையில்லை. சுரண்டல் ரவுடித்தன ஆட்சி எனப் பெயர் எடுத்துவிட்டதால் இழிவான 21 ம் பக்க அரசியல் செய்ய வேண்டியுள்ளது.


M Ramachandran
ஜூலை 31, 2025 18:31

ஒன்று கூடி என்ன திட்டம் போட்டாலும் இந்த முறை டப்பா டான்ஸ் ஆடிடும். பணப்போட்டியை காட்டி என்ன விதைய்ய காட்டினாலும் அதுவும் சேர்ந்து கவிழும். சும்மாவா குடும்ப அரசியல் வேலை செய்யுதில்ல


முருகன்
ஜூலை 31, 2025 17:24

அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என கூப்பிட்ட பிறகும் எந்த கட்சியும் இவர்கள் உடன் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை என்பதால் திமுக தடுக்கிறது என மாற்றி செய்தி வருகிறது


vivek
ஜூலை 31, 2025 18:42

பாவமா இருக்கு முருகா.... உண்மையை எப்படி மறைக்க முடியும்


beindian
ஜூலை 31, 2025 15:55

அதுக்கு அவசியமே இல்லை


தங்கம்
ஜூலை 31, 2025 14:23

ஆரிய திராவிட இயக்கங்களை தமிழ் மண்ணில் இருந்து அகற்றும் நேரமிது


mohana sundaram
ஜூலை 31, 2025 12:49

அயோக்கியன் பழனியாண்டி இருக்கும் வரை அந்தக் கட்சி உருப்பட போவதில்லை. பிஜேபிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். படித்த பண்பான அண்ணாமலையின் பேச்சைக் கேட்காமல் ஆழ் படுகுடியில் காலை நுழைத்து விட்டது பிஜேபி. இனி அது வெளியேறுவது மிக மிக கடினம்.


அரவழகன்
ஜூலை 31, 2025 12:41

தி.மு.க.வனவாசம் கிளம்ப தயாராகலாம்


Balachandran Rajamanickam
ஜூலை 31, 2025 12:19

DMK மட்டும் இல்ல திரு.பழனிசாமி முடியும் அதுதான். பிஜேபி வளர விடக்கூடாது DMK பிளான் வேலை பண்ணுறது விஜய், பழனிசாமி, மற்றும் dmk alliance parties.


venkatarengan.
ஜூலை 31, 2025 12:04

விஜய் ,சீமான்,பாட்டாளி மக்கள், மற்றும் ஓபிஸ் அவர்களை திமுக அணியில் சேர்க்கவும். முடிந்தால் இடப்பாடி அவர்களையும் சேர்க்கவும். அனைவரும் மோடி எதிர்ப்பாளர்கள் தான்.


புதிய வீடியோ