உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுக்கூட்ட அறிவிப்பு

அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுக்கூட்ட அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க., 54ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வரும் 17, 18 தேதிகளில், தமிழகம் முழுதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., 54ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தபடி, வரும் 17, 18 தேதிகளில், கட்சி ரீதியாக உள்ள, 82 மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடக்கவுள்ளன. சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். சென்னை, திண்டுக்கல், கோவை, நாமக்கல் உட்பட பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் கூட்டங்களில், அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை