உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணி இறுதியாகவில்லை!

அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணி இறுதியாகவில்லை!

சென்னை: டில்லியில் நடந்த அமித் ஷா - பழனிசாமி சந்திப்புக்கு பின்னரும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இறுதியாகவில்லை என்றே கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே பேச்சு தொடரும் என்கிறது அக்கட்சி வட்டாரங்கள்.அ.தி.மு.க.,வில், பா.ஜ., கூட்டணியை விரும்பும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க, பலமான கூட்டணி அமைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது. விஜய் கட்சிக்கு எவ்வளவு ஓட்டு என்பது தெரியாத நிலையில், அவரை கூட்டணியில் சேர்த்து, 'ரிஸ்க்' எடுக்க முடியாது என்பதால், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி போன்றவற்றை இணைத்து, மெகா கூட்டணி அமைத்தால், ஆட்சியை பிடிப்பது எளிது என, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர்.அதேநேரம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, பழனிசாமி உறவினர் வீடுகளில் நடந்த 'ரெய்டு' போன்றவையும், பழனிசாமிக்கு நெருக்கடிகள் கொடுத்தன. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் திடீரென பழனிசாமி டில்லி சென்றார். அவரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்றனர்.

இதைத்தான் பேசினோம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு, நேற்று சென்னை திரும்பினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானதாக, தகவல்கள் வெளியாகின. டில்லியில் நேற்று காலை பழனிசாமி அளித்த பேட்டி, அதை உறுதி செய்யவில்லை. அதனால், கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை என்றும், இரு தரப்புக்கும் இடையே பேச்சு தொடரும் என்றும், அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

டில்லியில் நேற்று காலையில், பழனிசாமி அளித்த பேட்டி:

அமித் ஷாவை சந்தித்தபோது, தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளை, அவரிடம் எடுத்துக் கூறி, நடவடிக்கை எடுக்க கோரினோம். * தமிழக திட்டங்களுக்கு, மத்திய அரசிடமிருந்து வரக்கூடிய நிதி, கால தாமதம் ஆகிறது. திட்டங்களுக்கு தேவையான நிதியை விரைந்து தர வேண்டும் என்றும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நிலுவைத் தொகை, கல்வி திட்ட நிதி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். * தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும். தொகுதி மறுவரையறை செய்யும்போது, தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சீரமைப்பு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்தள்ளது. போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என, அமித்ஷாவிடம் மனு அளித்தோம்.

எந்த அவசரமும் இல்லை

பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, டில்லிக்கு வந்ததாக செய்திகள் வெளியாகின்றன; உண்மை அதுவல்ல. மக்கள் பிரசனைக்காக மட்டுமே, டில்லி வந்து அமித்ஷாவை சந்தித்தோம். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு உள்ளது. அதற்குள் எந்த அவசரமும் இல்லை. ஊடங்கள்தான் தங்கள் போக்கில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என எழுதுகின்றன. அ.தி.மு.க., டில்லி அலுவலகத்தை பார்ப்பதற்காக வந்தேன். நேரம் இருந்ததால், உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டோம். அனுமதி கிடைத்ததும் சந்தித்தோம். தமிழக மக்கள் பிரச்னைகள் குறித்து, 45 நிமிடங்கள் பேசினோம். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, ஒராண்டு உள்ளது. எனவே, கூட்டணி குறித்து பேச கால அவகாசம் உள்ளது. கடந்த 2019, 2021 தேர்தல்களின்போது, தேர்தல் நெருக்கத்தில்தான் கூட்டணி முடிவு செய்யப்பட்டது. கூட்டணி வேறு; கொள்கை வேறு. கொள்கை என்பது நிரந்தரமானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடியது.தற்போது, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம், அங்கேயே இருக்கப் போவதில்லை. நிறைய மாற்றங்கள் வரும். அதெல்லாம் தேர்தல் நெருக்கத்தில் தான் தெரியும். விறுவிறுப்பான செய்திக்காக, பா.ஜ.,வுடன் கூட்டணி என, என்னை சொல்ல வைக்க பார்க்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முறையான அறிவிப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

'அமித் ஷா சொன்னால் நான் என்ன செய்வது?'

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: கூட்டணி விவகாரத்தில், எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா? இவ்வளவு ஏன்... தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் நிலையாக இருந்திருக்கின்றனவா? இதை யாராலும் சொல்ல முடியாது; காரணம், இது அரசியல். அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் இருக்கும். கடந்த 2019ல் மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலுக்கு, பிப்., மாதம் தான், கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டோம்; 2021 சட்டசபை தேர்தலிலும் அப்படித்தான்.தேர்தல் வரும்போது தான் அனைவரும் பேசி முடிவெடுக்க முடியும். கூட்டணி பற்றி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டால், நாங்கள் என்ன செய்வது? அது அவர்களின் விருப்பம்! அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும்போது, அனைவருக்கும் தெரிவிக்கப்படும். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பது தான், எங்களின் ஒரே குறிக்கோள்; அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

'எல்லாம் நன்மைக்கே!'

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், நேற்று சட்டசபைக்கு வந்தவரிடம், அமித் ஷா - பழனிசாமி சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, ''எல்லாம் நன்மைக்கே,'' என, அவர் பதில் அளித்தார். வேறு எதுவும் கூற மறுத்து விட்டார். அதேபோல், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடம்பூர் ராஜு, உதயகுமார் போன்றோர், கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

தாமரை மலர்கிறது
மார் 27, 2025 23:25

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடியிடம் இல்லை. எத்தனை தொகுதிகள் அதிமுகவிற்கு என்பதை அமித் ஷா தான் முடிவெடுப்பார். பிஜேபி அணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருப்பார். துணை முதல்வராக விஜய் வேண்டுமென்று எடப்பாடி விரும்புகிறார். ஸ்டாலின் ஆட்சி காலி.


venugopal s
மார் 27, 2025 18:06

என்ன, இன்னும் இறுதி ஆகவில்லையா? நமது சிங்கம் அமித்ஷா மீதான பயம் போய்விட்டது போல் உள்ளதே!


kannan
மார் 27, 2025 17:57

எல்லா இடங்களிலும் நிற்கலாம் தான் . அண்ணாமலை வீட்டு வார்டிங்ல கடைசி தேர்தலில் வாங்கிய ஓட்டு எத்தனை தெரியுமா.? போய் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைப் பார்த்து வீட்டுக்கு உபயோகமாக இருக்கவும்.


Matt P
மார் 28, 2025 08:27

நீங்க சொல்வதை paarthaal படிச்சவங்களெல்லாம் வேலையை பாருங்க. படிக்காத,படிப்பு வராதவர்களெல்லாம் அரசியல் ரவுடி தொழிலை பாருங்க yentru சொல்வதாக தெரிகிறது. படிப்பு வராதவர்கள் நிறைய பேர் அரசியலிலும் திரை தொழிலிலும் இருப்பதாக தெரிகிறது. arasiyal vaathykalukku kai katti படித்தவர்கள் வேலை செய்ய வேண்டும் என்பதை விட படித்தவர்களும் அரசியல் செய்து ஆட்சியில் அமர்ந்து பணி செய்யட்டுமே. makkal பொறுப்புணர்ந்து vakakalikkamal இருப்பதற்கு அண்ணாமலை என்ன செய்வார்?


amicos
மார் 27, 2025 17:19

இரட்டை இலை சின்னம் மற்றும் கடச்சிக்காக மட்டுமே இவர் பி ஜே பி யுடன் சேர்கிறார்.சின்னம் பற்றிய பிரச்சினை தீர்ந்த உடன் பி ஜே பி யை எதிர்ப்பார்.


Haja Kuthubdeen
மார் 27, 2025 16:01

இங்கே பிஜெபிகாரர்கள் அஇஅதிமுக என்னமோ பிஜெபி கூட சேர தவம் கிடப்பது போல நினைத்து ஏதேதோ எழுதி கொண்டு இருக்கிறார்கள்.நான் சொல்வதுதான் நடக்க போவுது...எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்..கூட்டணியில் பாமக விற்கு அடுத்த இடமே பிஜெபி...


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
மார் 27, 2025 16:29

நீ ஏன் Haja வாலறுந்த நாயாட்டம் அப்பயிருந்து குறுக்க மறுக்க வந்து தேவையில்லாம கருத்தை போட்டுக்கிட்டு இருக்க பாஜகவை பார்த்து எரிச்சல் வந்தா சுவத்துல போய் முட்டிக்க எரிச்சல் போயிரும்


R.PERUMALRAJA
மார் 27, 2025 11:59

மக்களின் emotions வுடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்காக இதுவரை ஆ தி மு க போராடவில்லை , அதனால் இளைஞர் பட்டாளமும் இல்லை , பேச்சாளர்கள் இல்லை , சினிமா துறையினர் இல்லை , கடந்த முறை கொள்ளை அடித்தவர்கள் , எதிர்கட்சியானவுடன் போராட்டத்திற்கு பணத்தை வெளியே எடுப்பதும் இல்லை , இதை பயன்படுத்தி நடிகர்கள் தாங்களே தனி கட்சி துவங்கி மக்களின் emotions வுடன் connect ஆகும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள் , கணிசமான ஓட்டையும் பிரிப்போம் என்று எண்ணி தேர்தல் நேரத்தில் 100 தொகுதி கொடு 119 கொடு என்று பேரம் பேச தயாராகிறார்கள் . வி சி க கட்சி எந்த சூழலிலும் தி மு க கூட்டணி யை விட்டு வெளியே வராது என்று தெரிந்தும் , வேங்கைவயல் ,ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை மற்றும் தென் மாவட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கொலைகளை கண்டிக்கவோ போராட்டம் நடத்தவோ ஆ தி மு க கட்சி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை . வேங்கைவெயில் போல பத்திரிக்கையாளர் சவுக்கு ஷங்கர் தாக்கப்பட்டு இருக்கிறார் , தேசிய ஊடகங்கள் சரமாரியாக இந்த அரசை விமர்சனம் செய்யும் வேளையில் , பெயரளவுக்கு பேட்டி கொடுத்து முடித்துவிட்டார் எடப்பாடி , இதுவே தி மு க வாக இருந்திருந்தால் , இந்நேரம் சாறை சாரையாக முக்கிய சாலைகளில் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவு என்னும் பெயரில் போராட்டம் நடத்தி மக்களின் அனுதாபத்தை பெற்றிருப்பர் . சட்டசபை நடைபெறும் நாட்களிலாவது மக்கள் பிரச்னை பேசி வெளிநடப்பு செய்து மக்களின் கவனத்தை பெறுவதை விடுத்து , அமித் ஷாவை சந்தித்து இருக்கிறார் , சட்டசபை நடவடிக்கைகளில் பெறுவதை காட்டிலும் amitshah முக்கியாவனரா என்று தி மு க இதுவரை குரல் உயர்த்தாமல் இருப்பதே எடப்பாடி பழனிசாமியிற்கு மிக பெரிய நன்மை . தேவை இல்லாதவைகளை தவிர்த்து , தேவையான பிரச்சனைகளை சரியான நேரத்தில் சரியான இடத்தில் செய்வதும் அரசியல் தலைவர்களுக்கு நன்று . அமிட்ஷாவுடன் ஆலோசனை சந்திப்பு இவையெல்லாம் தேவை இல்லாத ஒன்று அதுவும் சட்டசபை நடைபெறும் நேரத்தில் தேவை இல்லாத ஒன்று , கூட்டணி பற்றிய பேச்சுக்களும் இந்நேரத்தில் தேவை இல்லாதது .


vbs manian
மார் 27, 2025 11:38

minority மரணப்பிடியில் இருப்பவரை நம்புவது முட்டாள்தனம்.


மூர்க்கன்
மார் 27, 2025 16:20

என்ன பண்றது மணியா ஒன் ஜாதகம் அப்புடி?? பிச்சைக்காரன் க்கோட மதிக்க மாட்டேன்கிறான்


R.PERUMALRAJA
மார் 27, 2025 11:35

பா ஜ க வுடன் இறுதியாகாமல் இருப்பது நல்லது . ப ஜெ க இல்லாமல் மற்றவர்களுடன் சேர்ந்து 2026 தேர்தலில் வென்று , மாநிலங்கவை தேர்தலில் அனைத்திற்கும் ப ஜெ க கட்சியினருக்கு கொடுப்பது சிறந்தது.


Indianதமிழன்
மார் 27, 2025 11:15

” "நம்முடன் இருந்து கொண்டே துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.”- இது 2013 செய்தி. ஆனால் பிறகு நடந்தது என்ன? ஜெ இன்று இருந்தால் அவர்கருத்திலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.


sribalajitraders
மார் 27, 2025 10:34

மோடியா லேடியா எனக் கேட்ட ஜெயலலிதாவின் துணிச்சலை அதிமுக இழந்துவிட்டது


புதிய வீடியோ