உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்

திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக ஆட்சியை பாஜ உடன் இணைந்து அகற்றுவோம் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார்.

திட்டம்

இதன் பிறகு நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: நீண்ட இடைவேளைக்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினோம். தமிழக நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். அதிமுக பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றும். அதற்கான திட்டம் குறித்து பேச்சு நடந்தது.தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். திமுக ஆட்சியை அகற்றுவதற்கான பணியை அதிமுக பாஜ கூட்டணி செயல்படுத்தும். சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் வழிகாட்டுதல்

முன்னதாக பியூஷ் கோயல் கூறியதாவது: எனது நண்பரும், சகோதரருமான இபிஎஸ் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி. இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் தொடர்பான விவாதம் நடந்தது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுகவின் ஊழல் ஆட்சியில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறுகுறு தொழில், சிறு நிறுவனங்கள் தொழிற்சாலை, வர்த்தகர்களின் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் சிறந்த அரசு தமிழக மக்களுக்கு கிடைப்பது மிகவும் முக்கியம்.நமது தமிழ் சகோதரர் சகோதரிகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதே தேஜ கூட்டணியின் உறுதிமொழி. அதுவே பிரதமர் மோடியின் உறுதிமொழி. அதுவே தமிழகத்தில் நமது தலைவர்களின் உறுதிமொழி. அதிமுக பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் இணைந்து தமிழகத்தின் பொன்னான எதிர்காலத்துக்கு பாடுபடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kasimani Baskaran
டிச 24, 2025 04:35

எடப்பாடியின் குறிக்கோளே திமுக ஜெயிக்கவேண்டும் என்பதே. அதை அப்படியே விட்டால் தான் ஆடும் ஆட்டத்திலேயே திமுக அழிந்து போகும்.


mindum vasantham
டிச 23, 2025 19:47

23 என்பது மிக குறைவான தொகுதிகள் 17% வாக்கு வாங்கி பிஜேபிக்கு 23 சதவிகிதம் அதிமுகவுக்கு சட்டசபை என்று பார்த்தாலும் அறுபது தொகுதிகள் வாங்கிருக்கணும் நிச்சயம் 50 தொகுதி வாங்கியிருக்க வேண்டும், நான் உங்களை இந்திரா காங்கிரஸ் ஆகுங்கள் என்றால் தேமுதிக போல் ஆகி வருகிறீர்கள்


GMM
டிச 23, 2025 19:32

திமுக, அண்ணா திமுக தேசிய கட்சியான காங்கிரஸ், பிஜேபி யை பிடியில் வைக்க எண்ணுகின்றன. ஸ்டாலின், எடப்பாடிக்கு துதி பாடும் கோஷ்டி தவிர மக்கள் ஆதரவு மிக குறைவு. மாநில கட்சி தலைவர் தேர்வு கட்சி உறுப்பினர்கள் மூலம் 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வை கட்டாயம் ஆக்கி , தேர்தல் ஆணையம் பொறுப்பில் விட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை மட்டும் போட்டியிட வேண்டும். எடப்பாடி பிஜேபி சொல்வதை கேட்கும் நிலையில் உள்ளார். இழுபறி இருந்தால், திமுக பினாமி எடப்பாடி. பிஜேபி வளர்ச்சி தடுக்க அண்ணாமலையை முடக்கி விட்டார். கூட்டணிக்கு வலு தேவை.


mindum vasantham
டிச 23, 2025 18:30

பிஜேபி க்கு இருபத்தி மூன்று என்பது குறைவான தொகுதிகள் , பிஜேபி மற்ற கட்சிகள் இணைந்தே போட்டிஇடலாம்


kannan
டிச 23, 2025 18:23

அண்ணாமைலையை தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி ?


Indian
டிச 23, 2025 18:20

பா ஜா வுக்காக உழைத்த முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் எங்கே ?


mindum vasantham
டிச 23, 2025 17:59

பிஜேபி க்கு 50 என்பது சரியான எண்ணிக்கை கொஞ்சம் கட்சி வளைந்துள்ளது காங்கிரஸ் காட்டிலும் தனித்து நின்றாள் அதிக வாக்குகள் வாங்கலாம் , விஜய் வந்தால் என்ன செய்வார்கள் என்று யோசிக்க வேண்டும் பிஜேபி அதிமுக இணைந்தால் திமுக பயம் கொள்லும்


Venugopal S
டிச 23, 2025 17:57

அதையும் பார்க்கத் தானே போகிறோம்!


guna
டிச 23, 2025 18:18

எரியுதா வேணு...கவலை வேண்டாம் இருநூறு நிச்சயம்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 23, 2025 18:44

தீயமுக 240 ஜெயிக்கும் ஹாப்பி moorks


Barakat Ali
டிச 23, 2025 17:54

நிச்சயம் நடக்கும் ......


SUBRAMANIAN P
டிச 23, 2025 17:40

திமுக மேல மக்கள் ரொம்ப கடுப்புல இருக்காங்க, அதேபோல அதிமுக மேலயும். அப்புறம், பிஜேபி கொங்கிரஸ் மேல சரியான கோவத்துல இருக்காங்க.. சீஈமானை கண்டாலே மக்களுக்கு பிடிக்கல.. நிறைய பொய் பொய்யா சொல்லிட்டு திரியான். புதுசா கட்சி தொடங்கிருக்குற விசையை மக்கள் கழுவி ஊத்துறாங்க. லூ சு போல நிறையா ஒளறுறான். விசிகா திருமாவை மக்கள் கண்டா அவ்வளவுதான் காண்டாயிடுவாங்க. வைகோ பாவம் சைக்கோ ஆயிருக்காரு. கமலைக்கண்டா மக்களுக்கு வாந்தி வருது. அவரை எங்கும் அனுப்பிடாதிங்க. அப்புறம் பேதியாயிரும் கமலுக்கு. ரஜினி தப்பிச்சிட்டாரு. தேமுதிகா நல்லவேளை இப்போ இல்ல.. கடைசியில் தமிழக வாழாத உருமாய்க்கட்சி வேலுமுருகன் ஜெயிச்சி முதலமைச்சர் ஆயிருவாரு.. மண்டைய பிச்சிக்கிடுங்க எல்லாரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை