உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்

சென்னை: 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுக் குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், நேற்று சென்னை வானகரத்தில் நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: மத்திய அரசு மாநிலப் பேரிடர் நிதிக்கு வழங்கிய நிதியை வீணடித்துவிடாமல், முறையாக கணக்கெடுப்பு நடத்தி, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் விலைவாசி, குடிநீர் கட்டணம், பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம், வழிகாட்டி மதிப்பீடு உயர்வு என, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வரும் நிர்வாகத் திறமையற்ற தி.மு.க., அரசுக்கு கண்டனம் அரசு ஊழியர்கள் கோரி வரும் பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம் ஆகியவற்றை நிறைவேற்றாமல் வஞ்சிக்கும், தி.மு.க., அரசுக்கு கண்டனம் டங்ஸ்டன் சுரங்கம், தமிழகத்தில் மேலுார் அருகில் கொண்டு வர, மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே, அதை தடுக்க தவறிய, தி.மு.க., அரசுக்கும், பார்லிமென்டில் சட்டம் கொண்டு வரும்போது, தடுக்க தவறிய ஸ்டாலினுக்கும் கண்டனம். டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை, மத்திய அரசு கைவிட வேண்டும் அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை, தொடர் நடவடிக்கை எடுத்து செயல்படுத்த தவறிய, தி.மு.க., அரசுக்கு கண்டனம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்றவற்றில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தேர்தல் கமிஷன் நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யாததற்கும், பட்டியலின மக்களின் உரிமைகளை காப்பாற்ற, பாதுகாக்க தவறிய தி.மு.க., அரசுக்கு கண்டனம் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றிருந்த கல்வி, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்தபோது, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் மத்திய அரசு, தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை பாரபட்சம் இல்லாமல், வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை