உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 25ல் அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

25ல் அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

சென்னை,:அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னையில் நாளை மறுநாள் நடக்கிறது.இது தொடர்பாக, அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், மாவட்டச்செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், 25ம் தேதி மாலை 4:30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கும்' என கூறப்பட்டுள்ளது.கடந்த 11ம் தேதி, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலர்கள், செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்காமல், பா.ஜ.,வுடனான கூட்டணி அறிவிக்கப்பட்டு உள்ளதாக, கட்சியில் அதிருப்தி குரல் எழுந்துள்ளது. பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற முடிவு எதனால் எடுக்கப்பட்டது என்பது குறித்து, இந்த கூட்டத்தில் பழனிசாமி விளக்க உள்ளார். வரும் மே 2ல், அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள், சட்டசபை தேர்தலுக்கான செயல் திட்டங்கள் குறித்தும், மாவட்டச் செயலர்களுடன் பழனிசாமி ஆலோசிக்க இருப்பதாக தெரிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை