உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாழ்வா, சாவா நிலையில் அ.தி.மு.க.,

வாழ்வா, சாவா நிலையில் அ.தி.மு.க.,

அ.தி.மு.க., நாளை, 54வது ஆண்டில் அடி யெடுத்து வைக்கிறது. இந்த தருணத்தில், கடந்து வந்த பாதையையும், தற்போதுள்ள நிலைமையையும் நினைத்து பார்த்தால், நெஞ்சம் கலங்குகிறது; கண்ணீர் வடிகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிநடத்தியபோது, கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க.,வை நோக்கி வந்தன. ஆனால், அந்த நிலை மாறி, கூட்டணிக்காக கையேந்த வேண்டிய நிலை, தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைக்கு, அ.தி.மு.க., தள்ளப்பட காரணம், பல அணிகளாக பிளவுபட்டு இருப்பதுதான். இதே நிலை நீடித்தால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்திப்பது மட்டுமல்லாது, மூன்றாவது இடத்திற்கு தள்ளக்கூடிய நிலைமை, அ.தி.மு.க.,வுக்கு உருவாகும். 'வாழ்வா, சாவா' என்ற நிலைக்கு, அ.தி.மு.க., தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மனதில் நிலைநிறுத்தி, அ.தி.மு.க., வெற்றி பெறும் வகையில், பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட, நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம். - பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ