உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம்; தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்: ஐகோர்ட் தீர்ப்பு

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம்; தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையை தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d1zfhaib&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வழக்கு தொடர்ந்தார். அதன்படி இடைக்கால தடை உத்தரவை ஏற்கனவே ஐகோர்ட் பிறப்பித்திருந்தது.இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கூறி, தேர்தல் கமிஷன் மற்றும் ஓ.பி.ரவிந்தரநாத் ஆகியோர், மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில், நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (பிப்., 12) தீர்ப்பு அளித்தது. அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையை தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிட அதிகாரம் இல்லை என இ.பி.எஸ்., தரப்பு வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர். தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தலாம். சட்டப்படி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கூறி,ஏற்கனவே, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.இந்த தீர்ப்பின் எதிரொலியாக, இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்.,க்கு தரக்கூடாது என்று வலியுறுத்தி தரப்பட்டுள்ள மனுக்கள் மீது தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் இ.பி.எஸ்.,க்கு கட்சிக்குள் நெருக்கடி உருவாகும்; ஏற்கனவே கட்சிக்குள் செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் இ.பி.எஸ்.,க்கு எதிராக பேச தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.அதிகாரம் இல்லைஅ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லை. பதிவு செய்ய வேண்டியது மட்டுமே தேர்தல் கமிஷன் வேலை. இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. அ.தி.மு.க., உறுப்பினர்கள் என்ற போர்வையில் தரப்பட்ட மனு போலியானது.-சி.வி.சண்முகம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தமிழன்
பிப் 12, 2025 16:47

இனி பாஜக தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும் சின்னம், எடப்பாடி மற்றும் அல்லக்கை அமைச்சர்கள் ஊழல் மற்றும் கோடநாடு வழக்குகள் வேகமெடுக்கும் இதனால் கூட்டணிக்கு உட்படும் திருட்டு முன்னேற்றக் கழகம் இத்தனை நாட்களாக சொல்லி வந்த ரகசிய உறவு உண்மையாகும் போது திருட்டு முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதில் எளிதாகும்


ஆரூர் ரங்
பிப் 12, 2025 16:26

எப்போது எடுபிடி கும்பல் திமுக வை தமது பங்காளிகள் என்றார்களோ அன்றே அவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் வாரிசாக அழைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்களாகிவிட்டார்கள்.


kannan
பிப் 12, 2025 15:55

பா ஜ க இனிமேல் பார்த்துக் கொள்ளும்.


GMM
பிப் 12, 2025 14:14

தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் கட்சிகள் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிசன் மட்டும் தான் விசாரிக்க அதிகாரம் பெற்றது. ஐகோர்ட் விசாரணை, தீர்ப்பு, ஆய்வு அரசியல் சாசனம் அமைப்பிற்கு பொருந்தாது. சிறு வயதில், அரசு அதிகாரி ஒருவர், மாநில அளவில் மக்கள் பிரதிநிதி அதிகாரம் அமைச்சர் உட்பட அரசு அதிகாரி ஒப்புதல் இல்லாமல் செல்லாது என்றார். நீதிமன்ற உத்தரவு உயிர் பெற உரிய அதிகாரிகள் ஒப்புதல் தேவை. போலீஸ் அதிகாரம் அரசு அதிகாரி பிணைப்பு இல்லாமல் செலுத்த முடியாது. மாநில நீதி, நிர்வாக இறுதி முடிவு உயர் அதிகாரி கவர்னர். தகுதியில்லாத பல அதிகாரிகள் அரசு பதவியில் நுழைந்து வருகின்றனர், பிற்காலத்தில் நீதிபதி, அமைச்சர், போலீஸ் அதிகாரத்தை எளிதில் கைப்பற்றி விடுவர் என்றார் . சரியாக தான் கணித்துள்ளார் .?


Perumal Pillai
பிப் 12, 2025 13:25

இரட்டை இலைக்கு வந்தது ஆபத்து.


S.Martin Manoj
பிப் 12, 2025 13:24

திருட்டு வேலை அதிமுக துவங்கி விட்டது.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 12, 2025 13:13

இ பி எஸ் ஸை கூட்டணிக்கு கட்டாயப் படுத்துகிற பல வழிகளில் இதுவும் ஒன்று. பாஜக வுடன் கூட்டணி வைத்தால் அதிமுக இப்போ இருக்கும் 66 இடங்களில் பல இடங்களை இழக்கும்.


Barakat Ali
பிப் 12, 2025 13:08

தேர்தலில் அக்கட்சிக்கு இந்நிலை கடும் பின்னடைவை ஏற்படுத்தும் .. ஒரு மக்கள் விரோத திராவிடக்கட்சி ஒழியும்.. இன்னொன்றில் இருந்து மக்களுக்கு எப்போது விடிவு காலம் ????


Kadaparai Mani
பிப் 12, 2025 13:05

பழனிசாமிக்கு சாதகமாக நிறைய விஷயங்கள் நீதிபதி சொல்லி உள்ளார் The judges made it clear that the hearing of the parties concerned by the ECI, at the initial stage, must be confined only to satisfy itself regarding the existence of a dispute, which could be decided in terms of paragraph 15 of the Election Symbols Order. Only after conducting such a preliminary inquiry, the commission must arrive at a conclusion as to whether it had the jurisdiction to proceed further.


rama adhavan
பிப் 12, 2025 14:55

அவை தீர்ப்பு அல்ல. வெறும் கருத்துக்களே.


Anbuselvan
பிப் 12, 2025 12:37

வீம்பாக முரண்டு பிடிப்பதால் நஷ்டம் யாருக்கு? இவர்களுக்குத் தான். பழையபடி திருமதி சசிகலா, திரு பன்னீர்செல்வம் மற்றும் திரு தினகரன் ஆகியோர்களுடன் சமரச பேச்சு நடத்தி, தனக்கு எது சாதகம் என பார்க்காமல் கட்சிக்கு எது சாதகம் என அனைவரும் ஒரவஞ்சனையின்றி உண்மையான எண்ணத்துடன் முயன்றால்தான் இந்த கட்சிக்கு எதிர்காலம். இல்லையேல் பிஜேபி மெதுமெதுவாக வளர்ந்து இவர்கள் இடத்தை நிரப்ப கூடும். திரு விஜய் அவர்களது நடிகர் செல்வாக்கை மக்கள் எந்த அளவுக்கு அரசியல் செல்வாக்காக ஆக்குவார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இவரது படத்திற்கு முதல் ஷோ பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை தான் இப்போது இவருக்கு விழும் நிச்சயமான வாக்குகள் என எடுத்து கொள்ள முடியும்.