உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் எங்கள் போட்டியாளர்: சொல்கிறார் உதயநிதி

பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் எங்கள் போட்டியாளர்: சொல்கிறார் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் எங்கள் போட்டியாளர்,'' என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு உதயநிதி அளித்த பேட்டி: நீண்ட காலமாக எங்கள் பிரதான போட்டியாளராக அதிமுக இருந்தாலும், இப்போதைய நிலையில் பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. பலவீனமான நிலையில் அதிமுக இருந்தாலும், அதைத்தான் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் தான் எங்களது போட்டியாளர்.

தயார்

நாங்கள் பாஜ கட்சியையும் அதன் அனைத்து பி டீம்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் மதசார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பாஜ அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்பதை அறிந்தே இருக்கிறோம். தமிழக மக்கள் பாஜவின் சதியை அறிந்து அதை தோற்கடிப்பர். எங்கள் கூட்டணியில் ஒவ்வொரு கட்சியையும் திமுக மதித்து அவர்களது கருத்துகளை உள்வாங்கி கொள்கிறது. எங்கள் கூட்டணி பரஸ்பரம், மரியாதை தரக்கூடியது.

முக்கியத்துவம்

தேஜ கூட்டணியில் முடிவுகள் அனைத்து டில்லியில் எடுக்கப்பட்டு தமிழக கட்சிகளின் மீது திணிக்கப்படுகிறது. கட்சி தலைவர் ஸ்டாலின் திமுக இளைஞர் அணியை துவக்கி நீண்டகாலம் வழிநடத்தியவர். அந்தவகையில் இளைஞர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் புரிந்தே இருக்கிறார். கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க நான் குரல் கொடுப்பேன். இவ்வாறு உதயநிதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Matt P
ஜன 02, 2026 11:50

திமுகவுக்கு எந்த கட்சியும் போட்டியில்லை திமுக போட்டியே இல்லாமல் வெற்றி பெறும் என்று சொல்வாருன்னு பார்த்தஆல் இப்பயடி பேசிட்டாரு. அவங்க கட்சி தேர்தல் வந்தால் அங்கே எல்லோரும் போட்டியே அல்லாமல் தானே வெற்றி பெறுகிறார்கள். தலைவர் பதவிக்கும்,முதலவர் பதவிக்கு பொது செயலாளர் பொருளாளர் மகளிர் அணி தலைவிக்கு துணை முதலவர் பதவிக்கு எதுக்கும் போட்டி கிடையாது. ஒரு மனதாக தான். அது ஒரு தனி உடைமை கட்சி ...


k prakash
ஜன 01, 2026 20:47

பலவீனம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் இதை சொல்ல இது சொன்னது கூட உங்களுக்கு சுயமாக யோசித்த தெரியாது எழுதிக் கொடுத்ததாக இருக்கும் உங்கள் பலவீனத்திற்காக இந்த நாடு போதை மற்றும் பலவீனமாக மாறிக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா


Varadharajan Srinivasan
ஜன 01, 2026 19:04

தமிழக மக்களை கொள்ளையிட அக்ரிமெண்ட்


Rathna
ஜன 01, 2026 18:49

அக்ரீமெண்ட் போட்டு பேசுவது போல தெரிகிறது. இதில் முக்கியமான செய்தி, ஒரு தரமான 3ஆம் கட்சி தமிழ்நாட்டிற்கு தேவை என்பது. அது தமிழ்நாட்டு அரசியலை புரட்டி போடும் சக்தியாக இருக்க வேண்டும்.


தியாகு
ஜன 01, 2026 16:41

15 வருடங்கள் முதல்வராகவும் 10 வருடங்கள் பிரதமராகவும் இருந்திருந்தும் ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத தேசியவாதி மோடிஜியின் மொத்த சொத்து மதிப்பு அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணா வைத்திருக்கும் ஒரே ஒரு வெளிநாட்டு காரின் விலையை விடவும் குறைவு. இதெல்லாம் தற்குறி டுமிழர்களுக்கு தெரியாது, மோடிஜியை காரணமே இல்லாமல் வசை பாடுவார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


Chandru
ஜன 01, 2026 16:14

தற்போது ஒரு விஷயம் தெளிவாக விளங்க ஆரம்பித்து விட்டது தமிழ் நாட்டில். திமுக எதிர்கட்சியாய் கூட வராது என்று பலர் பேச கேட்க முடிகிறது .


Chandru
ஜன 01, 2026 16:06

புது வருடம் காமெடி டயலாக் குடன் தொடங்குகிறது . பலவீனமான மனிதர் பயத்தில் உளற ஆரம்பித்து விட்டாரே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2026 15:53

கிறிஸ்தவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று இரண்டுமுறை சொன்ன துணை ஜோக்கருக்கு இந்த விஷயம் தெரியுமா >>>> கேரளாவைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார் கனடாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்


GMM
ஜன 01, 2026 15:43

அண்ணா திமுக, கருணா திமுக போட்டி. தேர்தல் முடிவு காங்கிரஸ் தலைமையில் எதிர் கட்சி, பிஜேபி தலைமையில் ஆளும்கட்சி என்று கூட மாறலாம். திராவிட விஷத்திற்கு மாற்று மருந்து மக்கள் தேடும் காலம்.


Sun
ஜன 01, 2026 15:42

அந்த பலவீனமான அ.தி.மு.க தான் உங்கள் தாத்தாவை தொடர்ந்து 12 ஆண்டுகளும் உங்கள் தந்தையை தொடர்ந்து 10 ஆண்டுகளும் வன வாசத்தில் வைத்திருந்தது.


K V Ramadoss
ஜன 01, 2026 16:21

பூனை கண்ணை மூடிக்கொள்கிறது, அவ்வப்போது .....


புதிய வீடியோ