உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., வெளிநடப்பு

அ.தி.மு.க., வெளிநடப்பு

சென்னை:அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில் , ஹிந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ''கோவில்கள் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில், 1,800 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியை விட, கடந்த நான்காண்டுகளில் அதிக திருமணங்களை நடத்தியுள்ளோம்,'' என்றார்.அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், ''தி.மு.க., ஆட்சியில் நடந்ததை சொல்வதில் தவறில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று சொல்வது சரியல்ல,'' என்றார்.அப்போது, சேகர்பாபுவுக்கும், உதயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கையை நீட்டி காரசாரமாக பேசிக் கொண்டனர். அப்போது, உதயகுமாரை நோக்கி, சேகர்பாபு தெரிவித்த வார்த்தையால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.இரு தரப்பையும், அமைச்சர் துரைமுருகன் அமைதிப்படுத்தினார். அதையடுத்து, சேகர்பாபு தன் பதிலுரையை தொடர்ந்தார். அவர் உரையை முடித்ததும் எழுந்த உதயகுமார், சேகர்பாபுவை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறினார். அவருடன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ