உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ம் ஆண்டு பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்; வெளியானது புது அறிவிப்பு

2026ம் ஆண்டு பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்; வெளியானது புது அறிவிப்பு

மதுரை: 2026ம் ஆண்டு பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும் என எய்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான அனுமந்தராவ் தெரிவித்தார்.மதுரை தோப்பூரில், 2024ம் ஆண்டு மார்ச்சில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவங்கியது. இருகட்டமாக, 2 லட்சத்து 18,927 ச.மீ., பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவ கல்லுாரி, விடுதி கட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், மாணவ, மாணவியருக்கான தனி விடுதிகள், உணவகம், விளையாட்டுக் கூடம் போன்ற கட்டுமானத்தை, 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hjoywke1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான திட்ட மதிப்பீடு 2021.51 கோடி ரூபாய். தற்போது, 50 சதவீத பணிகள் முடிந் து உள்ளன. சமீபத்தில்,மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கட்டடங்கள் அமைய உள்ள முப்பரிமாண மாதிரி வடிவமைப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இன்று ( ஜூலை 04) மதுரை 'எய்ம்ஸ்' தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையில் ஆலோசனை கூட்டம், மதுரை தோப்பூர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதுரை 'எய்ம்ஸ்' நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் கூறியதாவது:எய்ம்ஸ் நான்காவது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது தோப்பூரில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதனால், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தை பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்.2027ம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கும். மாதந்தோறும் கட்டடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூலை 05, 2025 09:36

அடப்பாவிகளா! அது எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஃபோட்டோ அல்ல, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படம்! வழக்கமான பாஜகவின் சித்து வேலை!


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 12:18

பாதியளவு கூட மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்காமல் சமீபத்தில் வேலூர் பேன்ட்லாண்ட் அரசு மருத்துவமனையை முதல்வர் விழா எடுத்து துவக்கினார். செயல்படாமல் தூங்குகிறது.


Oviya Vijay
ஜூலை 05, 2025 07:15

நாடாளுமன்ற தேர்தலுக்காகவே அரைகுறையா முடிச்சு அவசரம் அவசரமா அயோத்தி ராமர் கோவிலை தொறந்தீங்களே... என்ன ஆச்சு... அங்கேயே உங்க கட்சி புட்டுக்கிச்சா... அதே மாதிரி முதற்கட்டமா 2026 ஜனவரில எய்ம்ஸ்ஸ தொறந்து நாங்களும் தொறந்துட்டோம் அப்படின்னு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடி சீன் போட பார்க்குறீங்க... ஆனாலும் உங்களுக்கு ஆப்பு அடிப்பாங்கல்ல... பொறுத்திருந்து தான் பாருங்களேன்... அரைகுறையா முடிக்காம ஒழுங்கா நல்லபடியா வேலைய முடிச்சு நல்லபேர் வாங்கப் பாருங்க... எலெக்ஷனுக்காக சீன் போடுற வேலையெல்லாம் இங்க வேணாம்... ஏன்னா என்னைக்குமே வேடிக்கை பார்க்கறதுக்கு மட்டும் தான் நீங்களே தவிர தமிழ்நாட்டை ஆள்றதுக்கு இல்லை...


Thravisham
ஜூலை 05, 2025 09:03

வித்தவுட் அவசர அவசரமாக அண்டா சட்டசபையை கட்டி எல்லாருக்கும் பிரியாணி பொட்டலம் வழங்கினாரே . செங்கலுடன் சின்ன தத்தியின் சிலையை பாஜக அணியினர் வைத்து வோட்டை அள்ளலாம்


Nada Rajan
ஜூலை 04, 2025 22:44

இந்தச் செய்தியை செங்கல் மன்னனுக்கு காமியுங்கள்... அவர் காட்டியது தெரியாமல் செங்கலை தூக்கி கொண்டு மதுரைக்கு சென்று விடாமல் தடுங்கள்..


சமீபத்திய செய்தி