விமான படைக்கு ஆட்கள் தேர்வு
சென்னை: இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளர், மருந்தாளுனர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம், பி.டி.உஷா சாலை, மகாராஜா கல்லுாரி அரங்கம் என்ற முகவரியில் ஆட்கள் தேர்வு நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தகுதி வாய்ந்தவர்கள் பங்கேற்கலாம்.மருத்துவ உதவியாளர் பணிக்கு ஜனவரி, 29ல் தேர்வு நடக்கிறது. இதற்கு, பிளஸ் 2 அல்லது டிப்ளமா மற்றும் பி.எஸ்.சி., பார்மசி படித்திருக்க வேணடும். மருந்தாளுனர் பணிக்கு பிப்., 4ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்கு டிப்ளமா மற்றும் பி.எஸ்.சி., பார்மசி படித்திருக்க வேண்டும்.