வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Their website also not working properly.
சேவைதரம் மேம்பட்டால் நல்லது..
சென்னை : 'ஏர் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஏர் இந்தியாவின், 'நமஸ்தே வேர்ல்டு' திட்டத்தின்படி, கடந்த 2ம் தேதி முதல், வரும் 6ம் தேதி வரை, விமான கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள், வரும், 12 முதல் அக்டோபர், 31 வரை பயணம் மேற்கொள்பவர்களுக்கு பொருந்தும்.உள்நாட்டு பயண சிறப்பு சலுகை கட்டணங் களாக, 'எகானமி' வகுப் புக்கு 1,499 ரூபாயில் இருந்து துவங்குகிறது. 'ப்ரீமியம் எகானமி' வகுப் புக்கு 3,749 ரூபாய் மற்றும் 'பிசினஸ் கிளாஸ்'க்கு, 9,999 ரூபாயில் இருந்து துவங்குகிறது. சர்வதேச வழித்தடங்களில், எகானமி வகுப்புக்கு 16,213 ரூபாய்; பிசினஸ் கிளாஸ்க்கு, 20,870 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. வரும், 6ம் தேதி வரை, ஏர் இந்தியாவில் உள்நாட்டு பயணத்திற்கு டிக்கெட், 'புக்கிங்' செய்பவர்களுக்கு, சேவை கட்ட ணம் வசூலிக்கப்படாது. எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில், 'புக்கிங்' செய்பவர்களுக்கு 1,000 ரூபாய் சிறப்பு தள்ளுபடி கிடைக்கும். கூடுதல் விபரங்களை, www.airindia.comமற்றும் 96670 34444 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Their website also not working properly.
சேவைதரம் மேம்பட்டால் நல்லது..