உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்தமானுக்கு விமான சேவை துவக்குது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

அந்தமானுக்கு விமான சேவை துவக்குது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

சென்னை:சென்னை - அந்தமான் விமான சேவையை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம், வரும் ஜனவரி 1ம் தேதி துவக்க உள்ளது.அந்தமானின் போர்ட் பிளேர் பகுதிக்கு, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து, 'இண்டிகோ, ஆகாஷா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா' விமான நிறுவனங்கள், தினசரி மற்றும் வாராந்திர விமான சேவையை வழங்கி வருகின்றன. ஐந்தாவது நிறுவனமாக, சென்னை - அந்தமான் இடையே, தினசரி விமான சேவையை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம், வரும் புத்தாண்டில் துவக்க உள்ளது. தினமும் சென்னையில் இருந்து காலை 5:05 மணிக்கு புறப்படும் விமானம், காலை 7:15க்கு போர்ட் பிளேர் சென்றடையும். அங்கிருந்து காலை 7:55க்கு புறப்பட்டு, காலை 10:10 மணிக்கு சென்னை வந்தடையும். இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை